வி. காமகோடி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வி. காமகோடி (V. Kamakoti),இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் இயக்குநராக 17 சனவரி 2022 அன்று நியமிக்கப்பட்டார்.[1] இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் முன்னாள் மாணவரும், இதே நிறுவனத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவராக பணியாற்றிக் கொண்டிருப்பவரும் ஆவர்.[2] இவர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி மைக்ரோபிராசசர் எனும் நுண்செயலியை வடிவமைத்த குழுவின் தலைவராக இருந்தவர்.[3][4][5]மேலும் இவர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.

2017ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கான பணிக்குழுவின் தலைவராக காமகோடியை மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டார்.

இளமைக்கால கல்வி

வி. காமகோடி சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் அதே துறையில் முதுநிலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் சென்னை கணித அறிவியல் கழகத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு முதுமுனைவர் பட்டம் பெற்றார். பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் கணினி அறிவியல் & பொறியியல் துறையில் விரிவுரையாளராக சேர்ந்தார்.[6]

விருப்பமான துறைகள்

வி எல் எஸ் ஐ (VLSI) வடிவமைப்பு, கிளஸ்டர் கம்ப்யூட்டிங், உயர் செயல்திறன் கணினி, அல்காரிதம்கள், தரவு கட்டமைப்புகள், கணக்கீட்டு வடிவியல் ஆகியவற்றின் மென்பொருள் அம்சங்கள்.

எழுதிய நூல்கள்[7]

  1. Building the SHAKTI microprocessor - Author. V. Kamakoti
  2. JUGAAD: Comprehensive Malware Behavior-as-a-Service -Authors: Sareena Karapoola, Nikhilesh Singh, Chester Rebeiro, V. Kamakoti
  3. Depending on HTTP/2 for Privacy? Good Luck! - Authors : Gargi Mitra, Prasanna Karthik V, Patanjali SLPSK, Nitin Chandrachoodan, V. Kamakoti
  4. VNF-DOC: A Dynamic Overload Controller for Virtualized Network Functions in Cloud. - Authors : Sudhakar Murugasen, Shankar Raman, V. Kamakoti
  5. Sparsity-Aware Caches to Accelerate Deep Neural Networks. Authors : Vinod Ganesan, Sanchari Sen, Pratyush Kumar, Neel Gala, V. Kamakoti, Anand Raghunathan

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வி._காமகோடி&oldid=25521" இருந்து மீள்விக்கப்பட்டது