வடிவேல் இராவணன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வடிவேல் இராவணன் |
---|---|
பிறந்தஇடம் | கோட்டூர், தேனி, தமிழ்நாடு |
பணி | விவசாயம், எழுத்தாளர் |
அறியப்படுவது | பொதுச் செயலாளர் பாட்டாளி மக்கள் கட்சி |
அரசியல்கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
வடிவேல் இராவணன் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பாட்டாளி மக்கள் கட்சியின், தற்போதைய பொதுச் செயலாளரும் ஆவார். இவர் அடித்தள மக்களுக்காக எழுதும் எழுத்தாளரும் ஆவார். இவர் பகுத்தறிவு, அம்பேத்காரிய எண்ணங்களை கொண்டவர்.
பிறப்பு
இவர் தேனி மாவட்டத்தில் கோட்டூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தைப் பெயர் சண்முகவேல் ஆகும்.[1]
பணி
1980களில் திருச்சியில் உள்ள அகில இந்திய வானொலியின் நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றினார்.[சான்று தேவை]
அரசியல்
1980களில் ஏற்பட்ட போடி கலவரத்தின் பாதிப்பால் பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரின் வழிகாட்டுதலின்படியே ஜான் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான பசுபதி பாண்டியன், முருகவேல்ராசன் போன்றோர் அக்கட்சியில் இணைந்து பின் வெளியேறியவர்கள். தற்பொழுது அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் இவர் முன்னர் இலக்கிய-கலைப் பிரிவின் தலைவராக இருந்தார்.
போட்டியிட்ட தேர்தல்கள்
இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, 43,506 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.[2]
எழுத்து
இவர் தேவநேயப் பாவாணரின் வழியில் செல்வதால், இவரின் எழுத்துகளில் தூய தமிழ் இருக்கும். இவர் தமிழ் ஓசை என்னும் நாளிதழில் ஈழத்தைப் பற்றி ஒரு தொடர் எழுதினார். மண்ணுரிமை என்னும் காலாண்டு இதழில் சிறப்பு ஆசிரியராக உள்ளார். மதுரை தலித் கலை ஆதார மையத்தின் சார்பாக இம்மானுவேல் சேகரனின் வாழ்வை ஒரு சிறு நூலாக வெளியிட்டு உள்ளார்.