றபிக்குல் இஸ்லாம் (1905 சிங்கப்பூர் இதழ்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
றபிக்குல் இஸ்லாம் சிங்கப்பூரிலிருந்து 1905ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
வெளியிட்டவர்
- தளவாய் சின்னவாப்பா மரைக்கார்.
இவர் இந்தியாவில் நாகூரைச் சேர்ந்தவர். ஓர் இசுலாமிய எழுத்தாளர். இவர் "காத்தான் கன்னிகை", "பிசாரத் பாத்திமா சரித்திரம்" போன்ற புதினங்களையும் (நாவல்) எழுதியுள்ளார்.
பொருள்
'றப்பீகுல் இஸ்லாம்' என்ற அரபுப் பதம் 'இஸ்லாமிய நண்பன்' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
இவ்விதழில் இசுலாமிய இலக்கியம், இசுலாமிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள் போன்றன இடம்பெற்றிருந்தன. 20ம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்தில் இவ்விதழ் வெளிவந்தமை அக்கால சூழ்நிலைகளுக்கமைய இதன் ஆக்கங்கள் எழுதப்பட்டிருந்தமை அவதானிக்கத்தக்கது.