ரமேஷ் பிரேதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரமேஷ் பிரேதன்
ரமேஷ் பிரேதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரமேஷ் பிரேதன்
பிறப்புபெயர் ரமேஷ் மருதமுத்து
பிறந்ததிகதி (1964-10-27)அக்டோபர் 27, 1964
பிறந்தஇடம் புதுச்சேரி
பணி எழுத்தாளர், விமர்சகர்
தேசியம் இந்தியா
கல்வி M.A.,[வரலாறு]
காலம் 1986 - தற்சமயம்.
வகை ’புனைவு’
'கவிதை'
கருப்பொருள் ’இலக்கியம்’
'பின்நவீனத்துவம்'
குறிப்பிடத்தக்க விருதுகள் புதுச்சேரி அரசின்
கம்பன் புகழ்
இலக்கிய விருது
(கவிதை)-1998

புதுச்சேரி அரசின்
கம்பன் பு
கழ் இலக்கிய விருது
(புதினம்) - 2001

சுஜாதா விருது
(கவிதை) - 2010

களம் புதிது
விருது (கவிதை) - 2011.
துணைவர் மாலதி மைத்ரி(1993-2007)
இணையதளம் Rameshpredan

ரமேஷ் பிரேதன் ஒரு தமிழ் எழுத்தாளர். இருபது ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். பாண்டிச்சேரி அரசின் ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ரமேஷ் பிரேதன் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் மருதமுத்து, அவரது சொந்த ஊர் திருச்சி. தாயார் பாலசுந்தராம்பாள், அவரது சொந்த ஊர் புதுச்சேரி. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு நடுநிலைப்பள்ளியிலும், பிறகு 9ம் மற்றும் 10ம் வகுப்பை வ.உ சிதம்பரம் உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். கலவைக் கல்லூரியில் 12ம் வகுப்பு படித்தார். அலாயன்சு பிரான்சேவில் பிரெஞ்சு டிப்புளோமோ முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை வரலாறு படிப்பை முடித்தார். 1983 முதல் 1985 வரை அசீபா என்ற காந்திய சமூக இயக்கத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1991 முதல் 1993 வரை பாண்டிச்சேரி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இல் கிளை மேலாளராகவும், 1998 முதல் 1999 வரை சென்னையில் ஆவணமாக்கல் பணியாளராகவும், 2000 முதல் 2004 வரை ஆரோவில் மைய நூலகத்தில், நூலகராகவும் பணியாற்றினார். தற்போது முழுநேர எழுத்தாளராக புதுச்சேரியில் வசித்து வருகிறார். பிரேமுடன் இணைந்து மொழிபெயர்ப்பு நீங்கலாக இருபத்தொரு நூல்களை ஆக்கியுள்ளார், இவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே இணைந்து எழுதி வந்தார்கள். பிரேம், மாலதி மைத்ரி ஆசியோருடன் இணைந்து சுமார் இருபது ஆண்டுகள் வாழ்ந்தார். இவருக்கு தாபிதா மைத்ரி என்ற பெண் குழந்தை உள்ளது.[1]

எழுத்துலக அறிமுகம்

1993ல் பிரேமுடன் இணைந்து எழுதிய, ”புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்” ரமேஷ் பிரேம் என்ற பெயரில் வெளியானது. இதுவே ரமேஷின் முதல் படைப்பு. 21 நூல்களை பிரேமுடனும், 8 நூல்களை தனியாகவும் எழுதியுள்ளார்.

விருதுகள்

  1. புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது(கவிதை) -1998
  2. புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது(புதினம்) - 2001
  3. 2010ம் ஆண்டிற்கான சுஜாதா விருது (’காந்தியைக் கொன்றது தவறுதான்' என்ற கவிதை நூலுக்கு)[2]
  4. 2011ம் ஆண்டிற்கான களம் புதிது விருது (’பன்றிக் குட்டி’ என்ற கவிதை நூலுக்கு) [3]

இதழியல் பங்களிப்புகள்

  • அமீபா - இலக்கிய இதழ்.
  • கதை சொல்லி - இலக்கிய/நாட்டுபுறவியல் இதழ்.
  • பரிமாற்றம் - அரசியல் மற்றும் சமூக இதழ்.

ஆக்கங்கள்

கவிதை நூல்கள்

புத்தகம் ஆண்டு வெளியீடு
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்[4] 2014 காவேரிப்பட்டிணம் : புதுஎழுத்து’
லிங்க ரூபினி 2012 கோவை : நீட்சி.’
பன்றிக்குட்டி 2011 புதுச்சேரி: கசடற பதிப்பகம்.
காந்தியை கொன்றது தவறுதான் 2008 நாகர்கோவில்: காலச்சுவடு.
சாராயக்கடை 2008 சென்னை: உயிர்மெய்.
நாவற்கொம்பு 2006 சென்னை: மருதா.
கொலை மற்றும் தற்கொலைப் பற்றி. 2005 சென்னை: மருதா
அதீதனின் இதிகாசம். 2005 சென்னை: மருதா
உப்பு 2005 சென்னை: உயிர்மெய்
சக்கரவாளக்கோட்டம் 2004 நாகர்கோவில்: காலச்சுவடு
கருப்பு வெள்ளை கவிதை 2002 எடுத்துக்காட்டு
பேரழகிகளின் தேசம். 2002 சென்னை: மருதா
இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும். 1997 தஞ்சை: அகரம்

நாடகம்

புத்தகம் ஆண்டு வெளியீடு
இரண்டு பிரெஞ்சு நாடகங்கள் 2005 சென்னை: சந்தியா பதிப்பகம்
பெர்னாதா அல்பாவின் இல்லம் 2002 சென்னை: ராஜராஜன் பதிப்பகம்
ஆதியிலேமாம்சம் இருந்தது 1996 புதுச்சேரி:கிரணம் பதிப்பகம்

புனைவு

புத்தகம் ஆண்டு வெளியீடு
அவன் பெயர் சொல் 2014 தஞ்சை: அகரம்
குருவிக்கார சீமாட்டி 2006 சென்னை: மருதா
மகாமுனி 2004 புத்தனதம்: அடயாளம்
பரதேசி 2003 சென்னை: மருதா
சொல் என்றொரு சொல் (A Semiotic novel) 2001 பெங்களூரு: காவ்யா
முன்பொரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன 2001 தஞ்சை: அகரம்
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் 2000 சென்னை: புதுப்புனல்
புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் 1993 புதுச்சேரி: கிரணம் பதிப்பகம்

அபுனைவு

புத்தகம் ஆண்டு வெளியீடு
கட்டுரையும் கட்டுக்கதையும் 2006 சென்னை: மருதா
பேச்சு மறுபேச்சு 2006 சென்னை:மருதா
சிதைவுகளின் ஒழுங்கமைவு : பின்நவீனத்துவ பிரச்சனைப் பாடுகள் 2000 பெங்களூரு: காவ்யா

ஆய்வு

புத்தகம் ஆண்டு வெளியீடு
கி. ராஜநாராயணன் எழுத்துலகம்.(A research reader) 2000 சென்னை: கலைஞன் பதிப்பகம்
இளையராஜா : இசையின் தத்துவமும் அழகியலும்(Research on Music of Ilayaraja) 1998 சென்னை: செம்புலம் பதிப்பகம்

கவிதைகள்

 சொல் என்றொரு சொல்
கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு
முடிவற்று நீளும் மதில் மீது
நேர்த்தியாக நடந்து செல்கிறது
பூனை என்ற ஒரு சொல்
ஆம் ஒரு சொல்
அதைக் கொஞ்சம் பின் தொடர்ந்தால்
அது ஒரு வாக்கியமாவதையும்
வாக்கியத்தின் நீண்ட அசைவில்
கண்ணாடிச் சில்லொன்று பொத்துவிட்டால்
மதிலின் பக்க வாட்டில் வழியும் குருதி
கவிதையாவதையும் வாசிக்கலாம்
அது பூனையைப் பற்றிய கவிதையாக இருக்குமென்று நீங்கள் எதிர்பார்த்தால்
ஏமார்ந்து போவீர்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. இந்த வாழ்க்கை குறிப்புகள் எழுத்தாளர் ரமேஷ் பிரேதனிடம் நேரடியாக உரையாடி (ஏப்ரல் 18, 2014) தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளின் படி பொது உரிமத்துடன் இங்கு இடப்பட்டுள்ளது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-04-22.
  3. http://www.dinamani.com/edition_chennai/article646364.ece
  4. http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5640745.ece
"https://tamilar.wiki/index.php?title=ரமேஷ்_பிரேதன்&oldid=5683" இருந்து மீள்விக்கப்பட்டது