யுனேசுவரன் ராமராஜ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு
யுனேசுவரன் ராமராஜ்
YB Yuneswaran Ramaraj

நாடாளுமன்ற உறுப்பினர்
ஜொகூர் சிகாமட் மக்களவை
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 நவம்பர் 2022
பெரும்பான்மை 5,669 (மலேசியத் தேர்தல் 2022)
தனிநபர் தகவல்
பிறப்பு Yuneswaran Ramaraj
1987
ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா
அரசியல் கட்சி பி.கே.ஆர் (PKR)
பிற அரசியல்
சார்புகள்

பாக்காத்தான் (PH)
(2022-இல் இருந்து)
படித்த கல்வி நிறுவனங்கள் *ஆங்கிலியா ரசுகின் பல்கலைக்கழகம், இங்கிலாந்து (2016)
Anglia Ruskin University, UK
*இலண்டன் பல்கலைக்கழகம் (2020)
* மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (2021)
பணி அரசியல்வாதி
இணையம் www.facebook.com/R.Yuneswaran

யுனேசுவரன் ராமராஜ் எனும் ஆர். யுனேசுவரன் (ஆங்கிலம்; மலாய்: Yuneswaran Ramaraj எனும் R. Yuneswaran; சீனம்: 尤内斯瓦兰•拉马拉吉); என்பவர் 2022 நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் ஜொகூர் சிகாமட் மக்களவை தொகுதியின் (Segamat Federal Constituency) மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவை செய்து வருகிறார்.[1]

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஆங்கிலியா ரசுகின் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்; இவர் சிலாங்கூர், சுங்கை பெசார் நகரில் உள்ள சின் மின் சீனப் பள்ளியில் (SRJK (C) Sin Min Sg Besar) சீனமொழி படித்தவர்; மேலும் சீனமொழியில் சரளமாக பேசக்கூடியவர்.[2]

பொது

சிகாமட் மக்களவை தொகுதியில் 47.7% மலாய் மக்களும்; 42.7% சீனர் மக்களும்; ஆக மொத்தம் 90.4% உள்ளனர். இந்தியர்கள் 9.2% மிகக் குறைந்த அளவில் உள்ளனர். இருப்பினும் 35 வயது நிரம்பிய ஒரு தமிழ் இளைஞர், அரசியல் பெரும்புள்ளிகளுடன் மோதி வெற்றி பெற்றது ஒரு தேர்தல் சாதனையாகக் கருதப் படுகிறது.

யுனேசுவரன் ராமராஜ், மலேசியாவின் முக்கிய மொழிகளான மலாய் மொழி; ஆங்கில மொழி; சீன மொழி; தமிழ் மொழி ஆகிய மொழிகளில் மிகச் சரளமாகப் பேசக் கூடியவர்.[3] இவர் 2022 நவம்பர் 19-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற போது, திருக்குறள் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் முன்னிலையில் யுனேசுவரன் ராமராஜ், மூன்று மொழிகளில் பிரசாரம் செய்த காணொலி யூடியூப் ஊடகத்தில் பதிவாகி உள்ளது.

சிகாமட் மக்களவை தொகுதி

சிகாமட் மக்களவை தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. பின்னர் 1974-ஆம் ஆண்டில் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து சிகாமட் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சிகாமட் மக்களவை தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]




Circle frame.svg.png

2022-இல் சிகாமட் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (47.7%)
  சீனர் (42.7%)
  இதர இனத்தவர் (0.4%)

தேர்தல் முடிவுகள் 2022

2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சிகாமட் மக்களவை தொகுதியில் ஆர். யுனேசுவரன் போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

பாக்காத்தான் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட யுனேசுவரனுக்கு 23,437 வாக்குகள் கிடைத்தன. பாரிசான் கூட்டணியின் மஇகா சார்பில் போட்டியிட்ட மஇகாவின் தேசியப் பொருளாளர் டான் ஸ்ரீ ராமசாமி முத்துசாமி (Ramasamy Muthusamy) அவர்களுக்கு 17,768 வாக்குகள் கிடைத்தன.

மலேசிய நாடாளுமன்றம்
ஆண்டு தொகுதி வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
வாக்குகள்
%
2022 P140 சிகாமட் யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj) (பி.கே.ஆர்)
23,437 46.27% ராமசாமி முத்துசாமி
(Ramasamy Muthusamy) (மஇகா)
17,768 35.08% 50,652 5,669 73.03%
பூபாலன் பொன்னுசாமி
(Poobalan Ponusamy) (பெர்சத்து)
8,385 16.55%
சையது அயிரோல்
(Syed Hairoul Faizey) (பெஜுவாங்)
1,062 2.10%

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யுனேசுவரன்_ராமராஜ்&oldid=25150" இருந்து மீள்விக்கப்பட்டது