ம. பெ. சீனிவாசன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ம.பெ.சீனிவாசன் |
---|---|
பிறந்ததிகதி | ஆகத்து 16, 1943 |
பிறந்தஇடம் | சேந்திஉடையநாதபுரம், தமிழ்நாடு |
பணி | பேராசிரியர் |
கல்வி | முனைவர் தமிழ் |
பணியகம் | மன்னர் துரை சிங்கம் அரசுக்கல்லூரி சிவகங்கை |
மபெசீ என்று பரவலாக அறியப்பெறும் பேராசிரியர் ம. பெ. சீனிவாசன் (பிறப்பு: 16 ஆகத்து 1943) தமிழறிஞரும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்.
சிவகங்கையை அடுத்துள்ள சேந்திஉடையநாதபுரம் என்னும் சிற்றூரிற் (1943) பிறந்தவர்.[1] பெற்றோர் ம.பெரியசாமி – சிட்டாள். பொருளியல் பட்டப்படிப்புக்குப் பின்னர், பட்டமேற்படிப்பில் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் தமிழ்பயின்று, கல்லூரி ஆசிரியராக 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
தமிழ்ப் பணியும் விருதுகளும்
ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானம் எனப்பெறும் பேருரைகளையும் விரும்பிக்கற்றவர். அத்துறையில் 'முனைவர்' பட்டம் பெற்றிருப்பதோடு, பல நூல்களையும் எழுதியிருக்கிறார். திறனாய்வு, ஒப்பீடு, தனிவரைவு (Monograph), வாழ்க்கை வரலாற்று இலக்கியம் , உரைவிளக்கம், தொகுப்பு (Compilation), பதிப்பு என பல வகைப்பாடுகளில் அமைந்த நூல்கள்
2012 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய விருது, சென்னை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
2015 வள்ளல் சடையப்ப விருது, மதுரை கம்பன் கழகம் மதுரை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
2011 டாக்டர் மு வ இலக்கிய நினைவு பரிசு, கவிதை உறவு அமைப்பு சென்னை. |நூல்: ஆழ்வார்களும் தமிழ் மரபும்|
நூல்கள்
வ.எண் | நூல்கள் | வெளியீட்டாளர் | பதிப்பு ஆண்டு |
---|---|---|---|
1 | திருமங்கையாழ்வார் மடல்கள் | அன்னம் சிவகங்கை | 1987 |
திருமங்கையாழ்வார் மடல்கள் (மறுபதிப்பு)) | மணிவாசகர் பதிப்பகம் சிதம்பரம் | 2002 | |
2 | வைணவ இலக்கிய வகைகள் | தேவகி பதிப்பகம் சிவகங்கை | 1994 |
திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள் (மேலதன் மறுபதிப்பு) | மெய்யப்பன்தமிழாய்வகம் சிதம்பரம் | 2001 | |
3 | பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) | சாகித்திய அகாதமி புதுதில்லி | 1996, 2006, 2011 |
4 | குலசேகராழ்வார் | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2003, 2015 |
5 | Kulasekara Alwar (in English under MIL Series) | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2009 |
6 | Periyalwar in English | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2014 |
7 | முதலாழ்வார்கள்]] | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2007, 2011 |
8 | திவ்வியப்பிரபந்தம் (பாசுரத்தொகுப்பு) ஆராய்ச்சி முன்னுரையுடன் | அன்னம் சிவகங்கை | 2010 |
9 | ஒரு நாள் ஒரு பாசுரம் | மணிவாசகர் பதிப்பகம் சென்னை | 2003,2006 |
10 | ஸ்ரீ இராமாநுசர் (ஞானபரம்பரை வரிசை) | அருட்செல்வர் நா.மகாலிங்கம் வெளியீடு (வி-உ) வர்த்தமானன் பதிப்பகம், சென்னை | 2006, 2009, 2014 |
11 | திருமுருகாற்றுப்படை உரை விளக்கம் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | 2009 |
12 | ஆழ்வார்களும் தமிழ் மரபும் | மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம் | 2010 |
13 | கம்பனும் ஆழ்வார்களும் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | 2011 |
14 | கம்பனில் சங்க இலக்கியம் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | 2013 |
15 | வண்டாடப் பூமலர | கவிதா பப்ளிகேஷன், சென்னை | 2013 |
மேற்கோள்கள்
நூல்களை தேடுங்கள் [[1]]
சீனிவாசன், ம.பெ புத்தகங்களுக்குத் தமிழியலில் வெளியான மதிப்புரைகள்] [[தொடர்பிழந்த இணைப்பு]]
ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி [[2]]
OPAC Online Public Access Catalogue [[தொடர்பிழந்த இணைப்பு]]
Dinamalar [[3]]