மோனிகா சின்னகொட்லா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோனிகா சின்னகொட்லா
இயற்பெயர்/
அறியும் பெயர்
மோனிகா சின்னகொட்லா
பிறந்ததிகதி 13 ஜனவரி 1994
பணி நடிகை
தேசியம் இந்தியர்

இந்தியாவின் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவரும் சென்னையில் பிறந்தவருமான இவர், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாவார். 2014 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமானஜீவாவில் அறிமுகமான இவர், அதைத் தொடர்ந்து பகடி ஆட்டம்(2017), ஜிவி (2019) மற்றும் பேச்சுலர் (2021) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்பட வாழ்கை

முதன்முதலாக இயக்குனர் சுசீந்திரனால் அடையாளம் காணப்பட்டு, அவர் இயக்கியகிரிக்கெட் பற்றிய திரைப்படமான ஜீவா (2014) திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் சகோதரியாக துணை வேடத்தில் தனது திரையுலக தடத்தை ஆரம்பித்த மோனிகா,அதன் பின்னர் பகடி ஆட்டம் (2017) திரைப்படத்தில் முதன்மை கதாநாயகியாக நடித்துள்ளார்.[2] நெஞ்சில் துணிவிருந்தால் (2017) பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பரவலாக எல்லாராலும் கவனிக்கப்பட்ட இவர் மீண்டும் இயக்குனர் சுசீந்திரனுடன் இணைந்து அவரது ஜீனியஸ் (2018) திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.[3]

2019 ம் ஆண்டில், வி. ஜே. கோபிநாத் இயக்கிய ஜிவி மற்றும் சுசீந்திரனின் உதவியாளர் மகாசிவன் இயக்கிய தோழர் வெங்கடேசன், ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார், இப்படங்களில் சிறப்பாக நடித்துள்ளதாக தமிழ் திரையுலகில் பாராட்டையும் பெற்றுள்ளார்.[4][5][6]

திரைப்படவியல்

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2014 ஜீவா ஜென்னியின் சகோதரி
2017 பகடி ஆட்டம் கௌசல்யா
2018 மேதை பிரிசில்லா
2019 ஜிவி ஆனந்தி
தோழர் வெங்கடேசன் கமலி
2020 தொட்டு விடும் தூரம்
நேரம் முடிந்தது
2021 பேச்சுலர் ரூஹி
2022 ஜிவி 2 ஆனந்தி
கல்லூரி சாலை கிரண்
2023 தாதா
நண்பன் ஒருவன் வந்த பிறகு படப்பிடிப்பு
தொலைக்காட்சி
ஆண்டு தலைப்பு பங்கு சேனல் குறிப்புகள்
2019 போலீஸ் டைரி 2.0 ஜீ5

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மோனிகா_சின்னகொட்லா&oldid=23233" இருந்து மீள்விக்கப்பட்டது