மு. அ. மசூது
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மு. அ. மசூது |
---|---|
பிறந்ததிகதி | மார்ச்சு 15 1949 |
பிறந்தஇடம் | கடையநல்லூர், தமிழ்நாடு, இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
மு. அ. மசூது (பிறப்பு: மார்ச்சு 15 1949) தமிழ்நாட்டின் கடைநல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். பின்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து சான்றிதழ் பெற்று தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தொழில்
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்
இலக்கியப் பணி
1980களில் எழுதத் தொடங்கிய இவர் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது கன்னிக் கவிதை தமிழ் முரசு மாணவர் மன்ற மலரில் பிரசுரமானது. இவரது அநேகமான படைப்புகள் பல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வெளிவந்துள்ளன.
எழுதியுள்ள நூல்
உணர்வுகளின் ஊர்வலம் (கவிதைத் தொகுப்பு)
பத்திரிகைத் துறை
கடையநல்லூர் முஸ்லிம் லீக் வெளியிடும் நம் குரல் எனும் இதழுக்கு இரண்டு தசாப்த்தங்களுக்கும் மேலாக ஆசிரியராகச் செயலாற்றி வருகின்றார்.
வகித்த பதவிகள்
சிங்கப்பூர் கடைநல்லூர் முஸ்லிம் லீக்கின் செயலாளராகவும் (1978), சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் துணைத் தலைவராகவும் (1992), இந்திய முஸ்லிம் பேரவையின் துணைச் செயலாளராகவும் (1992), லெங் கீ சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவின் செயலாளராகவும் (1999) சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
கவிதைக்காகவும், பொதுச் சேவைக்காகவும் மலேசிய பாரதிதாசன் கழகத்தின் பாராட்டு (1997)
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு