மனசெல்லாம் (திரைப்படம்)
மனசெல்லாம் | |
---|---|
இயக்கம் | சந்தோஷ் |
தயாரிப்பு | விஸ்வநாதன் ரவிச்சந்திரன் |
கதை | சந்தோஷ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஸ்ரீகாந்த் திரிசா நாசர் |
ஒளிப்பதிவு | முகமட் நஷீர் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | பிலிம்ஸ் பிரை. லிமிட். |
விநியோகம் | ஜெமினி புரடக்சன் |
வெளியீடு | 21 மார்ச்சு 2003 |
ஓட்டம் | 165 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனசெல்லாம் (Manasellam) 2003 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் திரிசா ஆகியோர் நடித்திருந்தனர். சந்தோஷ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2003 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தக ரீதியாக தோல்வி அடைந்தது. மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் 'மனசந்தா' எனும் பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
கதைச்சுருக்கம்
பாலா (ஸ்ரீகாந்த்) சென்னை செல்லும் வழியில் தனது பை மற்றும் சான்றிதழ்கள் அனைத்தையும் திருட்டிற்கு பலியாக்கி விடுகின்றான். இவனது நிலையைப்பார்த்த சுந்தரம் (ஹனிபா) எனும் செல்லப்பிராணிகள் கடை முதலாளி பாலாவிற்கு அவரின் வீட்டின் மேல் பகுதியில் ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள் (வையாபுரி, சியாம் கணேஷ், சுக்ரன்) தங்கியிருக்கும் இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றார். மலர் (திரிசா) இவர்கள் இருக்கும் இடத்தின் எதிரே மேல் மாடியில் குடியிருந்தாள். பாலாவுடன் குடியயிருந்த அத் திருமணம் ஆகாதவர்கள் மலரை விரும்பினர். அதனால் பாலாவை கண்டு ஐயம் கொண்டனர். இதனால் அவர்கள் பாலாவிற்காக ஒரு சட்டத்தை உருவாக்கினர். ஹைதராபாத்தில் இருந்து பாலாவிற்கு உதவிசெய்ய மூன்று பேர் வந்திருந்தனர்.
இப்பொழுதுதான் பாலா உண்மையையும் கடந்த காலங்களில் நடந்த விடயங்களையும் சொல்வதற்கு முனைந்தான். பாலா பணக்கார தொழிலதிபரின் (ராஜிப் மற்றும் பாத்திமா) மகன். ஒரு முறை ஏற்பட்ட விபத்தில் இருந்து மலர் அவனை காப்பாற்றினாள். இதனால் அவன் மலரை காதலிக்க முடிவு செய்தான். ஆனால் அவளுடைய சகோதரர்கள் அவளை சென்னைக்கு அழைத்து வந்து விடுகின்றனர். மலர் ஏற்கனவே இன்னொருத்தருக்கு நிச்சயமான பெண். எனவே இன்னொருதரம் இத்தவறை செய்ய கூடாது என சத்தியம் வாங்கி விடுகின்றனர். ஆனால் மலரிற்கு அரியவகை மூளை நோய்த்தாக்கம் இருப்பதையும் இதனால் அவள் விரைவில் இறந்து விடுவாள் என்பதையும் பாலா மட்டும் அறிகின்றான். இதனால் அவளது கடைசி காலங்களில் அவளை மகிழ்விக்க வேண்டும் என்றே அவள் அருகில் வந்து தங்கியதாக கூறினான். இதற்கிடையில் மலரின் உடல்நிலை மிக மோசமடைய அவளை மருத்துவ மனையில் சேர்கின்றனர். பாலா மலர் தன் கண்முன்னே இறப்பதை பார்ப்பதற்கு முடியாமல் மருத்துவமனைக்கு வெளியே வந்து விடுகிறான்.
நடிகர்கள்
- ஸ்ரீகாந்த் - பாலா
- திரிசா - மலர்
- வையாபுரி
- நாசர்
- விவேக்
- கொச்சின் ஹனிபா
- சியாம் கணேஷ்
தயாரிப்பு
வித்யா பாலன் ஆரம்பத்தில் கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டாலும் திரிசா படத்திற்கு ஒப்பந்தம் செய்ய படுகிறார்.[1][2] முதலாவது படப்பிடிப்பு சென்னையில் விஜயா வகுனி ஸ்ரூடியோசில் நடைபெற்றது.[3]
மேற்கோள்கள்
- ↑ "A Tamil entertainment ezine presenting interesting contents and useful services". Nilacharal. http://www.nilacharal.com/enter/cinebit/c66.html. பார்த்த நாள்: 2012-08-04.
- ↑ TNN 13 Jul 2012, 12.00AM IST (2012-07-13). "When Vidya Balan was kicked out - Times Of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2012-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6CnhbNlEY?url=http://articles.timesofindia.indiatimes.com/2012-07-13/did-you-know-/31160200_1_vidya-balan-hindi-films-south-filmmakers. பார்த்த நாள்: 2012-08-04.
- ↑ [1]