மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
Jump to navigation
Jump to search
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 309
- திணை - தும்பை
- துறை - நூழிலாட்டடு
பாடல் சொல்லும் செய்தி
வேல், அம்பு போன்ற இரும்புக்கருவிகளின் நுனி சிதையும்படி போரிட்டுப் பகைவரை வெல்வது என்பது பிறரும் செய்யக்கூடியதே ஆகும். ஆனால் இந்த நூழில் வீரன்றைப் போலப் பிறரை அஞ்சும்படி செய்வது அரிது.
பாசறையில் நூழிலாட்டும் வீரன் இருக்கிறான். புற்றில் பாம்பு இருப்பது போல இருக்கிறான். மன்றத்தில் கொல்லேறு சிங்கம் திரிவது போலத் திரிகிறான் என்று கேள்விப்பட்டதும் பகைவர் நடுங்குவர்.
நினைத்தாலே நடுங்கச் செய்யும் போர்த்தொழிலை நூழிலாட்டு என்பர்.