மதனகாமராஜன் கதை
மதனகாமராசன் கதை (Madanakamaraja Katha) தென்னிந்திய நாட்டார் கதைகளுள் ஒன்று. இது தமிழில் மதனகாமராசன் கதை என்றும், தெலுங்கில் மதனகாமராச கதாலு என்றும் அழைக்கப்படுகிறது.[1][2] இது தென்னிந்தியாவில் சொல்லப்பட்ட கதைகளின் தொகுப்பாகும். இவற்றில் சில கதைகள் இலங்கையிலும் பிரபலமாக உள்ளது.[3][4][5]
கதையின் இன்னொரு பெயர்
மதனகாமராஜன் கதை எனப்படும் இக்கதை 'மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பன்னிரெண்டு கதைகள் என்னும் மதனகாமராஜன் கதை' என்றும் குறிப்பிடப்படுகின்றது.[6]
கதை
இதன் கதைகள் ஆயிரத்தொரு இரவுகள் நூலில் சொல்லப்பட்ட கதைகளைப் போன்று நேரத்தைப் போக்குவதற்காக சொல்லப்பட்ட கதைகளை உள்ளடக்கியது. இளவரசனான மதனகாமராஜன் ஒரு ஓவியத்தில் இருந்த இரண்டு பெண்களைப் பார்த்து அவர்களின் மீது காதல் கொள்கிறான். தனது நண்பனான அமைச்சரின் மகனை அழைத்து, அந்த இரண்டு பெண்களையும் கண்டுபிடிக்குமாறு அறிவுறுத்தினான். அதில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து தான் திருமணம் செய்ய போவதாகவும், மற்றொரு பெண்ணை அமைச்சரின் மகன் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறுகிறான். அமைச்சரின் மகன் புறப்பட்டுச் சென்று இரண்டு பெண்களையும் கண்டுபிடித்து, அரண்மனைக்கு அழைத்து வருகிறான். அரண்மனை நோக்கி வரும்போது, அவர்களில் யார் தனது மனைவியாக இருப்பார் என்று தெரியாததால் அரண்மனையை அடையும் காலத்தை நீட்டிப்பதற்காக அவர்களுக்குப் பல கதைகளைச் சொல்வதன்மூலமாக காலம் தாழ்த்துகிறான். அவ்வாறு அவனால் கூறப்பட்டதாகக் கருதப்படும் கதைகள் அடங்கியதே இத்தொகுப்பு. இது தமிழில் 1848 மற்றும் 1855ஆம் ஆண்டில் வெளியானது.[7][8] இதனை நடேச சாஸ்திரி என்பவர் "திராவிட இரவுகள்" என்ற பெயரில் 1886ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பில் மொத்தம் பன்னிரெண்டு கதைகள் உள்ளன.[9]
இது நாட்டார் கதைகளில் முக்கியமானதாக இருந்தது என்றபொழுதிலும், தமிழ் இலக்கியக் பண்பாட்டில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[10] இந்தக் கதையினை அடிப்படையாகக் கொண்டு 1941ஆம் ஆண்டு மதனகாமராஜன் என்ற திரைப்படம் வெளியானது.
பன்னிரண்டு நாளும் சொல்லப்பட்ட கதைகள்
புகழேந்திப் புலவர் இயற்றிய இக்கதை முதலில் 'மதனகாமராஜன் கதை' எனத் துவங்கி ராஜகுமாரன் நிமித்தமாக மந்திரிகுமாரனாகிய புத்தி சாதுர்யன் இரண்டு ராஜகுமாரிகளை மணக்கிறான். பின் அவர்களோடு முதலிரவு மற்றும் தாம்பத்தியம் நடத்துவதை தள்ளிப் போடுவதற்காக அவர்களுக்கு 12 நாட்கள் இரவுகளில் கதைகள் சொல்கிறான் மந்திரிகுமாரன். அக்கதைகளின் விபரங்கள் :-
- முதலாவது நாள் கதை கூடுவிட்டுக் கூடு பாய்கிறது. இது மூத்த ராஜகுமாரிக்கு சொல்லப்பட்ட முதலாவது நாள் கதையாகும்
- இரண்டாம் நாள் பூனைக்குட்டி வளர்த்த கதை . இது இளைய ராஜகுமாரிக்கு சொல்லப்பட்ட கதையாகும்.
- மூன்றாம் நாள்
தாயைப் பெண்டாள வந்த ராஜகுமாரன் கதை . இது முதல் ராஜகுமாரிக்கு சொல்லப்பட்ட கதை.
4. நான்காம் நாள் ஆமையாயிருந்த இராஜகுமாரன் . தகப்பன் கோரின பெண்ணை மணம் புரிவித்த கதை. இது இளைய ராஜகுமாரியிடம் சொன்ன கதை. 5. ஐந்தாம் நாள் ஜகதலப் பிரதாபன் கதை. இது மூத்த ராஜகுமாரிக்கு சொன்ன கதை. 6. ஆறாம் நாள் மாங்கனியால் அரசு பெற்ற கதை . இது இளைய ராஜகுமாரிக்கு சொன்ன கதை.[11]
மேற்கோள்கள்
- ↑ Golla Narayanaswami Reddy (1988), The influence of English on Telugu literature, 1800-1950: with reference to translations and adaptations, Professor G.N. Reddy Sixtieth Birthday Felicitation Committee
- ↑ Charles Philip Brown; Golla Narayanaswami Reddy; Bangorey (1978), Literary autobiography of C.P. Brown, Sri Venkateswara University
- ↑ Henry Parker (1997), Village folk-tales of Ceylon (reprint ed.), Asian Educational Services, ISBN 978-81-206-1164-1
- ↑ Henry Parker (1977), Village folk-tales of Ceylon, Volume 2 (reprint ed.), Ayer Publishing, ISBN 978-0-405-10113-7
- ↑ Henry Parker (1914), Village folk-tales of Ceylon, Volume 3, Luzac & Co.
- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழுத்து மதனகாமராஜன் கதை - B. இரத்தின நாயகர் ஸன்ஸ் - திருமகள் விலாச அச்சகம் - சென்னை—1.
- ↑ East India Company Library (1851), A catalogue of the library of the Hon. East-India company: Supplement, Printed by J. & H. Cox, p. 119
- ↑ M. Manuel (1978), M. Manuel; K. Ayyappapanicker (eds.), English and India: essays presented to Professor Samuel Mathai on his seventieth birthday, Macmillan
- ↑ Folklore Society (Great Britain) (1887), The Folk-lore journal, Volume 5, Published for the Folk-lore Society, by Elliot Stock, p. 171
- ↑ Stuart Blackburn (2006), Print, folklore, and nationalism in colonial South India, Orient Blackswan, p. 203, ISBN 978-81-7824-149-4
- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய பெரிய எழுத்து மதனகாமராஜன் கதை - B. இரத்தின நாயகர் ஸன்ஸ் - திருமகள் விலாச அச்சகம் - சென்னை—1.
வெளி இணைப்புகள்
- S. M. Natesa Sastri (1886), The Dravidian night entertainments: being a translation of Madanakamarajankadai, Excelsior Press