மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது
Jump to navigation
Jump to search
மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | பயண இலக்கியம் (2 தனிநபர்கள்) | |
நிறுவியது | 1989 | |
முதலில் வழங்கப்பட்டது | 1993 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2007 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 30 | |
வழங்கப்பட்டது | கேந்திரிய இந்தி சன்ஸ்தான், இந்திய அரசு | |
விவரம் | இலக்கிய விருது | |
முதல் வெற்றியாளர்(கள்) | முனைவர். கமலா சாங்கிருத்யாயன் முனைவர். சியாம் சிங் ராசி | |
கடைசி வெற்றியாளர்(கள்) | முனைவர். பூரண் சந்திர ஜோஷி அரிராம் மீனா |
மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது (Mahapandit Rahul Sankrityayan Award, தேவநாகரி: महापंडित राहुल सांकृत्यायन पुरस्कार) இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் (நடுவண் இந்தி அமைப்பு) வழங்கும் விருதாகும். இந்தி செவி சம்மான் என்றும் ராகுல் சாங்கிர்த்யாயன் தேசிய விருது என்றும் அழைக்கப்படும் இந்த விருது இந்தியில் பயண இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாக இருவருக்கு வழங்கப்படுகிறது.