மகாநதி (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மகாநதி என்பது 1970 களில் வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மதுரையில் இருந்து வெளிவந்தத முற்போக்கு இதழ் ஆகும்.

வரலாறு

மகாநதி இதழ் மதுரையிலிருந்து வெளிவந்த 'இருமாதம் ஒரு முறை' கலை இலக்கிய வெளியீடு ஆகும். இது. 1970 களின் இறுதிக் கட்டத்தில் பிரசுரமான முற்போக்கு இதழ் ஆகும். இதன் ஆசிரியர் பரிணாமன் ஆவார். மகாநதி தரமான சிறுகதைகளையும், பயன் நிறைந்த சிந்தனைக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது. கட்டுரைகள் விஷயத்தில் மகாநதி மிகுந்த அக்கறை காட்டி, பல முக்கியமான பிரச்னைகளை அலசியிருக்கிறது. வட்டார இலக்கியம் சம்பந்தமான ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்தவை.

வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய நல்ல புத்தகங்களை விரிவான கட்டுரைகள் மூலம் இது அறிமுகம் செய்தது. நல்ல திரைப்படங்கள் குறித்தும் விரிவான கட்டுரைகளை 'மகாநதி’ வெளியிட்டது. போலந்து திரைப்படம், ஆந்த்ரேவாய்தாவின் 'தி பிராமிஸ்ட் லேண்ட்', தெலுங்கு திரைப்படம், மிருணாள் ஸென்னின் 'ஒரு ஊரின் கதை' ஆகியவை முக்கியமானவை.[1] மகாநதி ஒன்பது இதழ்களோடு மறைந்து விட்டது.

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகாநதி_(இதழ்)&oldid=17683" இருந்து மீள்விக்கப்பட்டது