மகர ஈற்றுப் புணர்ச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நிலை மொழி ஈற்றில் ம் அமைந்து வந்து பிற சொற்கள் இணைவதை மகர ஈற்றுப்புணர்ச்சி அல்லது மவ்வீற்றுப்புணர்ச்சி எனப்படும்.

நன்னூல் விதி 219

"மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்"

விளக்கம்

மகரத்தை (ம்) ஈற்றெழுத்தாக வந்த நிலைமொழியானது புணர்ச்சியின் போது ம் கெடுவதும்,பின் நிலைமொழி உயிரீற்று ஒப்பவும் ,நிலைமொழி உயிரீற்று எழுத்து அடுத்து வரும் வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக இருக்கும் போது வல்லொற்றும் இணைந்து வருவதும் சிலவிடங்களில் வன்மைக்கு இடமாகத் திரிதலும் உண்டு.

எ.கா :- மரம்+அடி = மரவடி (வேற்றுமை)

எ.கா :- வட்டம்+ஆழி =வட்டவாழி(அல்வழி)

எ.கா :- நிலம்+கடந்தான்=நிலங்கடந்தான்(வேற்றுமை- வன்மைக்கு இனமாகத் திரிந்தது)

எ.கா :- மரம்+கடந்தான்=மரங்கடந்தான்(வேற்றுமை)

எ.கா :- மரம்+கிளை = மரக்கிளை(வேற்றுமை)

எ.கா :- வட்டம்+கல்=வட்டக்கல்(அல்வழி)

கருவி நூல்

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

"https://tamilar.wiki/index.php?title=மகர_ஈற்றுப்_புணர்ச்சி&oldid=20629" இருந்து மீள்விக்கப்பட்டது