ப. ஜீவகாருண்யன்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை தமிழர்விக்கி நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், தமிழர்விக்கி:நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை தயவுகொண்டு துப்புரவு செய்து உதவலாம். |
ப. ஜீவகாருண்யன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் வசித்து வரும் இவர் எழுதிய “நதியின் மடியில்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இவர் எழுதிய "களரி" நாவல் 1998 ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் ற்றது. இதே நூலுக்கு (என்.சி.அனந்தாச்சாரி அறக்கட்டளையின் விருதும் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.)
இவரது "சமத்துவச் சுடர் இராமானுஜர்" மற்றும் "கவிச்சக்ரவர்த்தி" ஆகிய இரு நாடக நூல்களும் "திருப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின்" விருதுகளை இருமுறை ற்றுள்ளன என்பது சிறப்பு மிக்கது.
இன்னும் [["நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, பாரதி இலக்கியச் சங்கத்தின் சி.சு.செல்லப்பா நினைவிலக்கிய விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது"]] உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடுமையான புற்றுநோய் பாதிப்பிலும் சிகிச்சைகள் மேற்கொண்டு தொடர்ந்து இலக்கியப் பணியாற்றி வருகிறார்.
இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிய போது "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில்" இணைந்து செயலபட்டிருக்கிறார். கடலூர் மாவட்டச் செயலாளராகவும் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் இதுவரை [["30 நூல்களை" எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை,நாவல்,குறுநாவல், சிறுவர் இலக்கியம், நாடகம், வசன காவியம், மொழிபெயர்ப்பு]] என சொல்லிக் கொண்டே போகலாம்.
இவருடைய மறுவாசிப்புப் புதினங்களான "கிருஷ்ணன் என்றொரு மானுடன்" மற்றும் "குந்தி" ஆகியன பரவலாக மக்களிடையே சென்றடைய வேண்டிய தேவை தற்போது உள்ளது.
"இறுதிப்படியிலிருந்து" என்னும் சிறுகதைத் தொகுப்பு இவருடைய மற்ற நூல்களிலிருந்து வித்தியாசப் பட்டதாக இருக்கிறது. இதுவரை யாரும் முயன்று பார்க்காத வகையில் "மகாபாரத" நூலின் குறிப்பிடத் தகுந்த மிக முக்கியப் பாத்திரங்கள் தங்கள் வாழ்க்கையினை தம் இறுதிக் கட்டத்தில் இருந்து விவரிப்பதாக 16 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அத்தனைக் கதைகளும் மறுவாசிப்புத் தளத்தில் இயங்குவது கூடுதல் சிறப்பு.
இவர் எழுதிய மொத்தம் 120 சிறுகதைகளில்'உயிர்களில்' என்னும் சிறுகதை பத்தாண்டுகளாக தமிழ்நாடு அரசின் பாடநூலில் ஒன்பதாம் வகுப்பு தமிழ்த் துணைப் பாடத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
இவரது "வளர்பிறைகள் தேய்வதில்லை" என்ற சிறுகதை தினமணி நாளிதழ் மற்றும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
இவருடைய"எம்.டி.வாசுதேவன் நாயர் முதல் எச்.சி.ஆண்டர்சன் வரை" என்னும் நூல் முப்பது வெவ்வேறு நூல்கள் குறித்த முத்தான மதிப்புரைகளை உள்ளடக்கிய மிக அருமையான நூல்.
இவருடைய தமிழ்நாடு அரசின் விருது பெற்ற "களரி" நாவல் மலையாள மொழியில் திரு.விஜயகுமார் குனிசேரி அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டு "ஜனசக்தி" மலையாள வார இதழில் தொடராக வெளிவந்து பின்னர் ஆலிவ் பப்ளிகேஷன்ஸ் வழியில் அழகிய நூலாக்கம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய "மனிதனை நேசிக்கிறேன்" என்ற புதுக்கவிதைகள் தொகுப்பு பல நீண்ட கவிதைகள் கொண்ட நூலாக அடையாளப் படுகிறது. "ஒளிப்பா 200" என்னும் 200 சிறந்த லிமரைக்கூக் கவிதைகள் கொண்ட தொகுப்பும் கவனிக்கத்தக்கது.
மகாகவி பாரதியின் கவிதைகளில் ஆழ்ந்த பற்றுடைய இவர் தன்னுடைய முதல் கவிதை நூலான"நீலவானத்து நித்திலங்களில்" தன் அவாவினைக் கூறியுள்ளார். அது "பாரதி உன் பாட்டை வெல்லும் ஒரு பாட்டேனும் பாடிவிட வேண்டுமிதென் வாழ்நாள் நோக்கம்" என்பதாகும்.
பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஆழ்ந்து வாசித்து ஊர்ந்த இவர் இயல்பிலேயே மரபுக்கவிதைகளை இயற்றும் வல்லமை பெற்றிருந்தார்.இவர் கற்றது ஐ.டி.ஐ.ஃபிட்டர் தொழிற்கல்வி. ஆனால் தமிழின் மீதான பற்று இவரைத் தேர்ந்த எழுத்தாளராகப் பரிணமித்தது.
ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக நடைபெறும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சியில் இவரது ஒரு நூலாவது வெளியிடப்படும். நெய்வேலியில் நிறைய எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன்.
எழுத்தாளர் ப.ஜீவகாருண்யன் அவர்கள் "திசை எட்டும்" (புரவலர் திரு.நல்லி குப்புசாமி செட்டியார்) மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.
மலையாளத்தில் ஜார்ஜ் இம்மட்டி எழுதிய "111 பாலகதைகள்" என்ற மிகச் சிறிய நூலை அருமையான தமிழில் எளிய நடையில் மொழிபெயர்ப்பு செய்து "111 சிறார் கதைகள்" என்னும் தலைப்பில் அழகிய நூலாக நிவேதிதா பதிப்பகத்தின் வழியில் வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 36 ஆண்டுகள் பணியாற்றி தற்போது பணி ஓய்வுக்குப் பிறகு தன் சொந்த ஊரான வெம்பாக்கம் கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திலும் இணைந்து செயலாற்றி வருகிறார்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் வலிகளையும் தாண்டி வாசிப்பதை மட்டும் நிறுத்தாமல் மேற்கொண்டு வந்தார். இவர் "நடுநாட்டு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்" என்னும் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு அது நூலாக்கம் பெற்று வெளிவரும் சமயத்தில் ஜூலை 15,2023 அன்று இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.புற்றுநோய் என்னும் கொடிய அரக்கன் தன் கோரப்பசிக்கு அவரை இரையாக்கிக் கொண்டான்.
தன் சொந்த ஊரான வெம்பாக்கம் மண்ணின் மடியில் உறங்கும் அவரது கனவு என்னவென்றால், தான் இதுவரை தன் வீட்டில் சேகரித்து வைத்திருக்கும் பத்தாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை அவர் கல்வி கற்ற வெம்பாக்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரு நூலகம் அமைத்து அதில் அப்புத்தகங்களை வைத்து அங்குப் பயிலும் மாணவர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதாகும். மேலும் தான் தமிழிலக்கிய உலகிற்குக் கொடையாக்கியிருக்கும் தன் படைப்புகளை நாட்டுடைமையாக்கும்படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.