பூந்துறையான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முனைவர் பூந்துறையான் (பிறப்பு: ஏப்ரல் 23, 1950, இயற்பெயர் : இரத்தினமூர்த்தி) தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டி என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கா.வெங்கடாசலம், வீரம்மாள். மனைவி சாந்தி. இவர் தமிழுக்காக உழைக்கும் முதன்மையானவர்களில் ஒருவர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனித்தமிழறிஞர்கள் பலரின் தொடர்பில் இருந்தவர். அவர்களின் நூல்களைக் கற்றும், இயக்கப் பணிகளில் பங்கெடுத்தும் வருபவர். தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை என்னும் தலைப்பைத் தேர்ந்து எடுத்து, பேராசிரியர் முனைவர் கா. அரங்கசாமியின் நெறிப்படுத்தலில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து தமிழ்ப்பணி புரிந்து வருபவர். தொடர்ந்து தொல்காப்பிய ஆய்விலும், சங்க இலக்கிய ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருபவர்.

கல்வி

இவர் கள்ளிப்பட்டியில் தொடக்க காலக் கல்வியை முடித்தவர். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் வித்துவான் படிப்பை நிறைவு செய்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.

எழுதி வெளியிட்ட நூல்கள்

  • மரபுத்தொடர்களும், சொற்றொடர்களும் (1977)
  • தொல்காப்பிய நோக்கில் புதுக்கவிதை (2000)
  • திருமுருகாற்றுப்படை அமைப்பியல் ஆய்வு (2001)
  • மாணவர் நாற்பது (2004)
  • குடும்ப மேலாண்மை (2005)
  • நாம் தமிழாசிரியர் (20010)
  • கண்மணி நீ அய்.ஏ.எஸ். ஆக வாழ்த்துகிறேன் (2010)
  • குறிஞ்சிப்பாட்டு 99 மலர்களின் வண்ணப்படங்களுடன் (2011)
  • தெரிந்த குறட்பாக்கள் எத்தனை? (2011)
  • தொண்டு செய்யத் துடிப்போர்க்கு (2011)
  • திருக்குறள் உரை (குறுந்தகட்டுடன்) (2011)
  • மாணவர் இருபது (2012)
  • தமிழ்நாட்டு அஞ்சல் குறியீட்டு எண்கள் (2012
  • தலை நிமிர்வோம், தமிழ் உணர்வோடு (2012)
  • செல்லக் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் (2012)
  • இளைய வீறே! எழுகவே! (2013)
  • திருவள்ளுவர் வெள்ளி,பொன் காசுகள் (2009)
  • திருவள்ளுவர் வெள்ளிச்சிலை (2010)
  • மாணவர் இருபது காணொளி / video (2013)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூந்துறையான்&oldid=26095" இருந்து மீள்விக்கப்பட்டது