பூந்துருத்தி நம்பிகாடநம்பி
Jump to navigation
Jump to search
பூந்துருத்தி நம்பிகாடநம்பி பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருவிசைப்பா பாடிய அருளாளர்களில் ஒருவராவார்.
பிறப்பு
இவர் சோழ நாட்டில் காவிரியின் தென்கரையில் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திருப்பூந்துருத்தி என்னும் பாடல் பெற்ற சிவத்தலத்தில் அந்தணர் குலத்தில் தோன்றியவர்.[1] இவர் திருவாரூர், சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார்.
வாழ்ந்த காலம்
முதல் இராஜாதிராஜனுடைய (கி.பி.1018 - 1054) 32 ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவையாற்றுக் கல்வெட்டில் `ஒலோகமாதேவீச்சரத்து ஸ்தானமுடைய சேத்திர சிவபண்டிதர்க்காகத் திருவாராதனை செய்யும் ஆத்திரையன் நம்பிகாட நம்பி` என்று காணப்படுவதால் பூந்துருத்தி நம்பிகாட நம்பியின் காலம் கி. பி. 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் எனலாம்.[1]