பு. இரா. கோகுலகிருட்டிணன்
பு. இரா.கோகுலகிருட்டிணன் (பிறப்பு 13 ஆகத்து 1928) குசராத்து உயர்நீதி மன்ற முதன்மை நீதிபதியாகப் பதவி வகித்து ஒய்வு பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் பிறந்த கோகுலகிருட்டிணன் தம் தொடக்கக் கல்வியைச் சென்னைத் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் பட்டப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்.
சட்டப்பணி
நீதிபதிகள் வெங்கடாச்சாரி, சி.ஏ வைத்தியலிங்கம் ஆகியோரிடம் இளையராக இருந்து வழக்குரைஞர் தொழிலைக் கற்றுக் கொண்டார். பார் கவுன்சிலுக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டார் 1967 ஆம் ஆண்டில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக அமர்த்தப் பட்டார். அட்வகேட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார் 1969 இல் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக அமர்த்தப்பட்டு சில ஆண்டுகள் கழித்து முதன்மை நீதிபதியாகவும் ஆனார். 1985 மார்ச்சு 21 இல் குசராத்து உயர்நீதி மன்ற முதன்மை நீதிபதியாகப் பதவியேற்றார்.
பிற ஈடுபாடுகள்
ஓய்வுக்குப் பின்னர் நீதிபதி கோகுலகிருட்டிணன் சமூக, பண்பாட்டு, சமயச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தலைமை ஏற்றார். பன்னாட்டுத் திரைப்பட தேர்வுக் குழுவில் இடம் பெற்றார்.