பிலோ இருதயநாத்
பிலோ இருதயநாத் (1916[1] 1992 செப்டம்பர் 2) இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதியவர் ஆவார். இவர் மைசூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னையில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறார். இந்தியா முழுவதும் மிதிவண்டியில் சுற்றியலைந்தவர் என்பது இவரது தனிச்சிறப்பு. பயண நாட்களில் மிதிவண்டியை மரத்தின் ஒரத்தில் நிறுத்தி மிதிவண்டியின் சுமைதளத்தை (கேரியரை) மரத்தோடு இணைக்கும் பலகையை போட்டு படுத்து உறங்குவார் [2].
ஆக்கங்கள்
இவர் இந்தியாவில் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி ஆவார். பிலோ இருதயநாத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறுபதிற்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதியுள்ளார்.[3]
விருதுகள்
- 1960களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
- 1978ல் இந்திய அரசின் நல்லாசிரியர் விருது
சில புத்தகங்கள்[4]
இவர் 29 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார், அவற்றுள் சில:
- அறிவியல் பூங்கா, 1967, இளங்கோ பதிப்பகம், சென்னை.
- ஆதிவாசிகள், 1961 கலைமகள் காரியாலயம், சென்னை.
- ஆதிவாசிகள் மறைந்த வரலாறு, 1977 தமிழ் செல்வி நிலையம், சென்னை.
- இமயமலை வாசிகள், 1967 மல்லிகை பதிப்பகம், சென்னை. (திபேத்தியர், தோலி மலைவாசிகள், இமயமலைப் பாங்கினியர்கள், நேபாளவாசி குர்க்கானியர்)
- ஏழைகளின் குடும்பக்கலை, 1965, அன்னை நிலையம், சென்னை 17.[1]
- காட்டில் என் பிரயாணம், 1967, இளங்கோ பதிப்பகம், சென்னை.
- காட்டில் கண்ட மர்மம், 1984 வானதி பதிப்பகம், சென்னை.
- காட்டில் மலர்ந்த கதைகள், 1984 வானதி பதிப்பகம், சென்னை.
- காடு கொடுத்த ஏடு, 1965 ஆகத்து, கலைமகள் காரியாலயம், சென்னை-4.[1]
- குறிஞ்சியும் நெய்தலும், தென்றல் நிலையம், சிதம்பரம்
- கோயிலும் குடிகளும், தென்றல் நிலையம், சிதம்பரம்
- கோயிலைச் சார்ந்த குடிகள், தென்றல் நிலையம், சிதம்பரம்
- கேரளா ஆதிவாசிகள், 1989 வானதி பதிப்பகம், சென்னை.
- கொங்கு மலைவாசிகள், 1966 மே, மல்லிகைப் பதிப்பகம், சென்னை. [1]
- பழங்குடிகள், 1978 தமிழ் செல்வி நிலையம், சென்னை.
- மக்கள் வணங்கும் ஆலயம், 1965, அன்னை நிலையம், சென்னை 17.[1]
- மேற்கு மலைவாசிகள், 1979 மல்லிகை பதிப்பகம், சென்னை
- தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு, தென்றல் நிலையம், சிதம்பரம்.
- நீலகிரி படகர்கள், 1965 மே, மல்லிகைப் பதிப்பகம், சென்னை. [1]
- யார் இந்த நாடோடிகள், 1985 வானதி பதிப்பகம், சென்னை
மறைவு
இவர் 02-செப்டம்பர் 1992 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 தில்லைநாயகம், வே (பதி), தமிழ்நாட்டு நூற்றொகை 1966; மு.பதி 1969; கன்னிமாரா பொதுநூலக நூலகர், சென்னை. பக்கம் 35
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-07-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090709164507/http://www.sramakrishnan.com/view.asp?id=272&PS=1.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180821044938/http://googleda.com/2017/07/23/snapshots-of-dr-philo/.
- ↑ http://www.indianfolklore.org/journals/index.php/ifl/article/view/613/556[தொடர்பிழந்த இணைப்பு]