பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம்
பிறந்ததிகதி 22 ஏப்ரல் 1942 (1942-04-22) (அகவை 82)
பிறந்தஇடம் யாழ்ப்பாணம், வட மாகாணம், இலங்கை
பணி பொறியியலாளர்
தேசியம் இலங்கையர்
கல்வி கொழும்பு பெண்கள் கல்லூரி
கல்வி நிலையம் இலங்கைப் பல்கலைக்கழகம்
சோமர்வில் கல்லூரி, ஆக்ஸ்போர்டு
அறியப்படுவது முதல் பெண் பொறியியலாளர்

பிரேமலா சிவப்பிரகாசபிள்ளை சிவசேகரம் (பிறப்பு 22 ஏப்ரல் 1942),இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆவார். இலங்கை நாட்டின் முதல் பெண் பொறியாளர் மற்றும் முதல் பெண் கட்டிட பொறியாளர் என்றும் கருதப்படுகிறார்..[1][2] இலங்கையின் பொறியாளர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[3]

2019ம் ஆண்டு மார்ச்சு மாதம், சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த கொண்டாட்டத்தில் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலிடப்பட்ட  பன்னிரெண்டு பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர், இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[4][5]

சுயசரிதை

இவரது தந்தை தம்பையாப்பிள்ளை சிவப்பிரகாசபிள்ளை கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்த புகழ்பெற்ற பொறியியலாளர் ஆவார்.[6] இவரது தந்தையின் வேலையின் பொருட்டு இவரது குடும்பத்தினர் கொழும்பில் தங்கியிருந்தனர், ஆனால் 1942 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ஜப்பானியர்கள் கொழும்பு துறைமுகத்தில் குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து குடும்பமாக இடம் பெயர்ந்து சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்குச் சென்றனர். பிரேமலா 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

வாழ்க்கை

பிரேமலா,பெண்கள் கல்லூரியில் பள்ளிக்கல்வியை கற்றுள்ளார். பின்னர் 1960 ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் சேர்ந்தார். 1964 அவர் நாட்டின் முதல் பெண் பொறியியல் இளங்கலை பட்டதாரி மற்றும் முதல் பெண் பொறியாளர் ஆனார்.[7] பட்டம் பெற்ற பிறகு அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பிரேமலா, ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில் கல்லூரியில் நிதி உதவித்தொகைப் பெற்று, அதன் மூலம் கட்டமைப்பு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் மேலும் கல்லூரி சார்பாக 1967 ம் ஆண்டில் பெண் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டார் [8] 1966 ம் ஆண்டில் பிரித்தானிய மகளிர் பொறியியல் சங்கத்தில் சேர்ந்தார் மற்றும் 1969 ம் ஆண்டில் இலங்கையில் முதல் பெண்கள் பொறியியல் ஆண்டை அறிமுகப்படுத்தியதில் பங்கேற்றார் [9]

1978 ம் ஆண்டில், இலங்கை நாட்டின் முதல் பெண் தலைமை கட்டமைப்பு பொறியியலாளராக பொறுப்பேற்று கொழும்பில் உள்ள வடிவமைப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜயவர்தனவினால் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டின் முக்கிய பொறியியலாளர்களில் ஒருவராக பிரேமலா பணியாற்றினார்.

1983 கறுப்பு ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து பிரேமலா தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்று இயல்பு நிலை ஏற்பட்டவுடன் இலங்கைக்குத் திரும்பினார்.

விருதுகள்

2015 ஆம் ஆண்டில் இலங்கையின் பொறியாளர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 'சிறந்த பொறியியல் விருது' பெற்றுள்ளார்.[10]

2019ம் ஆண்டு மார்ச்சு மாதம், சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த கொண்டாட்டத்தில் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெண்களின் பட்டியலிடப்பட்ட  பன்னிரெண்டு பெண் ஆளுமைகளில் ஒருவராக இவர், இலங்கை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

  1. EFac7075 (2019-07-25). "EFac7075 Fwd: Dr. Premala Sivaprakasapillai Sivasegaram: The First Female Engineer In Sri Lanka" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2019-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191111130732/https://efac7075.org/2019/07/25/efac7075-fwd-dr-premala-sivaprakasapillai-sivasegaram-the-first-female-engineer-in-sri-lanka-2/. 
  2. "Search Results | National Library of Australia" (in en-au). https://catalogue.nla.gov.au/Search/Home?lookfor=author:%22Sivasegaram,%20Premala%20Sivaprakasapillai%22&iknowwhatimean=1. 
  3. "The Institution of Engineers Sri Lanka - Lady Engineers of Sri Lanka". http://ioes18.wildapricot.org/Lady-Engineers-of-Sri-Lanka. 
  4. "Sri Lanka : Sri Lanka parliament celebrates Sri Lankan Women Changemakers". http://www.colombopage.com/archive_19A/Mar28_1553788980CH.php. 
  5. Mudalige, Disna; Indrakumar, Camelia Nathaniel and Menaka. "Twelve prominent women to be celebrated" (in en). http://www.dailynews.lk/2019/03/27/local/181457/twelve-prominent-women-be-celebrated. 
  6. "Professor Thambyahpillai Sivaprakasapillai (Civil and Environmental Engineering 1933" (in en). https://www.imperial.ac.uk/news/9974/professor-thambyahpillai-sivaprakasapillai-civil-environmental-engineering/. 
  7. "Firsts Of A Kind". http://serendib.btoptions.lk/article.php?issue=113&id=2674. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Premala Sivaprakasapillai Sivasegaram - The first female engineer in Sri Lanka". https://roar.media/english/life/identities/dr-premila-sivaprakasapillai-sivasegaram-the-first-female-engineer-in-sri-lanka/. 
  9. "The Woman Engineer Vol 10". http://www2.theiet.org/resources/library/archives/research/wes/WES_Vol_10.html. 
  10. "Engineering Excellence Awards Past winners". https://iesl.lk/index.php?option=com_content&view=article&id=128:engineering-excellence-awards-past-winners&catid=2&lang=en&Itemid=299.