பிருத்வி நாத் கவுலா
பிருத்வி நாத் கவுலா Prithvi Nath Kaula | |
---|---|
பிறப்பு | சிறிநகர், சம்மு காசுமீர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 13 மார்ச்சு 1924
இறப்பு | 30 ஆகத்து 2009 இலக்னோ, இந்தியா | (அகவை 85)
கல்லறை | இலக்னோ, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலை பேராசிரியர், பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
பணி | நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிபுணர் |
செயற்பாட்டுக் காலம் | 1947-2009 |
அறியப்படுவது | நூலகம் மற்றும் தகவல் அறிவியல் |
பிள்ளைகள் | 5 |
விருதுகள் | பத்மசிறீ (2004) |
வலைத்தளம் | |
Endowment website |
பிருத்வி நாத் கவுலா (Prithvi Nath Kaula) இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஒரு நூலகர் அவார். 1924 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் ஒரு நிபுணராகவும் எழுத்தாளராகவும் இயங்கினார். அறுபது புத்தகங்களையும் தனிவரைவுகளையும் கவுலா எழுதியுள்ளார். ஆறு தொழில்முறை இதழ்களை நிறுவி அவற்றின் ஆசிரியராகவும் இருந்துள்ளார், 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட அறிவார்ந்த இதழ்கள், 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட சக மதிப்பாய்வுகள், 43 நூற் பட்டியல்கள் மற்றும் 6000 குறிப்புகளை கவுலா எழுதியுள்ளார். 2004 ஆம் ஆண்டு [[பத்மசிறீ|இந்திய அரசு பிருத்வி நாத் கவுலாவிற்கு பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது.[1] [2]
ஆரம்ப கால வாழ்க்கை
பிருத்வி நாத் கௌலா 1924 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் சம்மு காசுமீரில் உள்ள சிறீநகரில் ஒரு காசுமீரி பண்டிட் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது. வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கலைப் பீடத்தின் உயர்கல்வியை முடித்தார். 1947 ஆம் ஆண்டில் பிலானியில் உள்ள பிர்லா கல்வி அறக்கட்டளையில் நூலகராகப் பணியாற்றினார். பின்னர் இவர் மத்திய நூலகத்தின் நூலகராகவும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் , நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் இதே பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் கல்வித் தலைவராகவும் பணியாற்றினார். [1] [3]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Detailed profile". Kashmir Forum ORG. http://kashmirforumorg.blogspot.in/2009/09/padmashri-p-n-kaula-remembered-by-close.html.
- ↑ "Padma Shri award". Govt. of India website. http://archive.india.gov.in/myindia/padmashri_awards_list1.php?start=620.
- ↑ "Prithvi Nath Kaula passed away". IT BHU chronicle. http://www.itbhuglobal.org/chronicle/archives/2009/08/prof_prithvi_na.php.