பிரியா ஐயப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரியா ஐயப்பன்
Smt. Priya Ayyappan.jpg
2022ல் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரியா ஐயப்பன்.
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1972 மே 07
சென்னை, இந்தியா
பிறப்பிடம்சென்னை இந்தியா
தொழில்(கள்)ஆன்மீக பேச்சாளர்

பிரியா ஐயப்பன் (PRIYA IYAPPAN), தமிழகத்தைச் சேர்ந்த இந்து சமயச் சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் ஆவார். "ஸ்ரீ கிருஷ்ணா சத்சங்கம்" என்ற அமைப்பை 2016இல் நிறுவி, அதன் மூலம் நாராயணீயம், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம், பாகவதம் உள்ளிட்ட ஆன்மீக நூல்களைப் பற்றி தமிழ் மொழியில், அனைவருக்கும் எளிதில் விளங்கும்படி எடுத்துரைத்து வருகிறார். கிருஷ்ணா சத்சங்கம் யூடியூப் சானலில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் பங்கேற்கும் தொடர் நாராயணீய பாராயண நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். [1]

ஒவ்வொரு பாராயணத்தின் முடிவில், சிந்தனைத் துளி என்னும் தலைப்பில், ஆன்மிகம் முதல் ஆரோக்கியம் வரை உள்ள பல்வேறு விடயங்களைக் குறித்து 2-3 நிமிட மணியளவிற்கு பயனுள்ள நல்ல தகவல்களை தனது சத்சங்க உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். இவருக்கு, பேச்சும், எழுத்தும் கைவந்த கலையாக உள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளும் தெரிந்த இவர், சமஸ்கிருத ஞானமும் வாய்க்கப் பெற்றவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

புத்தக வெளியீடு

திருமதி பிரியா ஐயப்பனின் ஊக்கமளிக்கும் கதைகள், ஆன்மீக பக்தர்களின் சரித்திரங்கள், வாழ்க்கையை வளமாக்குவதற்கான வழிகள் மேலும், பல்வேறு சொற்பொழிவுகள் போன்றவற்றைத் தொகுத்து, 'ஆன்மீகமும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பில் புத்தகமாக சென்னையிலுள்ள சந்தியா பதிப்பகத்தாரால் சூன் மாதம் 2022இல் வெளியிடப்பட்டது. வெளியான மூன்று வாரங்களில், 600 புத்தகங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமன் நாராயணீய அகண்ட பாராயணம்

கடந்த செப்டம்பர் மாதம், 10ம் தேதி அன்று (10.9.2022), உலக நன்மைக்காக, தொடர்ந்து 12 மணி நேரம் ஸ்ரீமன் நாராயணீய அகண்ட பாராயண நிகழ்ச்சியானது சென்னை, பம்மல் சங்கர் நகரில் அமைந்துள்ள[2] ஸ்ரீ தர்ம சாஸ்தா குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்றது. இதில், நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 150 மெய்யன்பர்கள் கலந்து கொண்டனர். உலக மக்களின் ஆயுள், ஆரோக்கிய சௌக்கியத்திற்காக செய்யப்பட்ட இந்த பாராயண வேள்வி, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்திய பிரியா அய்யப்பனுக்கும், பாராயணத்தில் கலந்து கொண்ட 150 பேருக்கும் 'யூனிவர்சல் அச்சீவர் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' மற்றும், 'பியூச்சர் கலாம் விருது'ச் சான்றிதழுடன் அட்டையும் வழங்கப்பட்டது.[3] </ref> இதில், சென்னை, அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் முனைவர் பாபு பாலகிருஷ்ணன், மயிலாப்பூரில் அமைந்துள்ள மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் முனைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ காஞ்சி சுவாமிகளால் 'குரு சேவா ரத்னம்' என்ற பட்டம் பெற்ற பிரேமா கிருஷ்ணமூர்த்தி, தொலைக்காட்சி புகழ், பிரவசன சுதா வாணி என்றழைக்கப்படும் தாமல் பெருந்தேவி, பம்மல், ஸ்ரீ தர்ம சாஸ்தா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவரான எச். கிருஷ்ணன், திரு. எம். நடராஜன்; சந்தியா பதிப்பகம், சங்கரராம சர்மா, முனைவர் என். எஸ். ராஜ கோபாலன் மற்றும் தேவி உபாசகரான பால சைதன்யா போன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாதனை

கடந்த திசம்பர் மாதம், 17ம் தேதி அன்று (17.12.2022) உலக நன்மைக்காக, விரைவாகச் சொல்லும் ஸ்ரீமன் நாராயணீய பாராயண நிகழ்ச்சி பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யதுகிரி யதிராஜ மடத்திற்கு சொந்தமான இராமானுஜ ஸம்ஸ்கிருதி பவனத்தில் நடைபெற்றது.[4] இதில் திருமதி பிரியா அய்யப்பனுடன் சேர்ந்து 142 பங்கேற்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த பாராயண நிகழ்ச்சி காலை 10 மணி அளவிற்குத் தொடங்கி பிற்பகல் 2.15 மணி வரை நடைபெற்றது. இதில், சென்னை, அசீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் முனைவர் பாபு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சி உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், நிகழ்ச்சியை நடத்திய பிரியா அய்யப்பனுக்கும், பாராயணத்தில் கலந்து கொண்ட 142 பேருக்கும் 'யூனிவர்சல் அச்சீவர் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்' மற்றும், 'பியூச்சர் கலாம் விருது'ச் சான்றிதழுடன் அட்டையும் வழங்கி சிறப்பித்தார்.[5] இதில், திருமதி ஸ்ரீவித்யா ராமகிருஷ்ணன் நடுவராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரியா_ஐயப்பன்&oldid=26194" இருந்து மீள்விக்கப்பட்டது