பரங்கிப்பேட்டை ஆதிமூலேசுவரர் கோயில்
பரங்கிப்பேட்டை ஆதிமூலேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°28′58″N 79°44′48″E / 11.482825°N 79.746724°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கடலூர் மாவட்டம் |
அமைவிடம்: | பரங்கிப்பேட்டை |
சட்டமன்றத் தொகுதி: | சிதம்பரம் |
மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
ஏற்றம்: | 43 m (141 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | ஆதிமூலேசுவரர் |
தாயார்: | அமிர்தவல்லி |
குளம்: | வருண தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தை அமாவாசை, மாசி மகம், திருக்கார்த்திகை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
பரங்கிப்பேட்டை ஆதிமூலேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
அமைவிடம்
இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் வருணாசேத்ரம் என்றழைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வட கிழக்குப் பகுதியில் இக்கோயில் உள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 47 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°28'58.2"N, 79°44'48.2"E (அதாவது, 11.482825°N, 79.746724°E) ஆகும்.
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக ஆதிமூலேசுவரர் உள்ளார். இறைவி அமிர்தவல்லி ஆவார். வில்வமும், வன்னியும் கோயிலின் தல மரங்களாகும். கோயிலின் தீர்த்தம் வருண தீர்த்தமாகும்.[1]
அமைப்பு
சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்த பூசை செய்த பின்னர் நடையடைப்பர். இங்கு பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் அவ்வாறாக பூசைகள் செய்த பின் நடை அடைக்கப்படுகிறது. அர்த்த சாமத்தில் சித்திரகுப்தர் சிவனுக்கு பூசை செய்வதாகக் கூறுவர். சித்தரகுப்தர் சிவனின் அருளைப் பெற்று அவருடைய கணக்கராகப் பணியாற்றி தலமாக இவ்விடம் கருதப்படுகிறது. 12 வயதில் அவருக்கு உயிர் பிரியும் விதி இருந்ததை நினைத்து அவருடைய தந்தை வருந்தினார். தந்தைக்கு ஆறுதல் கூறிய சித்திரகுப்தர் இத்தல இறைவனை வழிபட்டார். எமன் அவரைப் பிடிக்க வந்தபோது சிவனால் இறைவி அனுப்பிவைக்கப்பட்டு, அவர் தடுக்கப்பட்டார். எமனும் சித்திரகுப்தரை விடுவித்தார். சித்திரகுப்தர் சன்னதி அம்மன் சன்னதிக்கு எதிரேயுள்ளது.[1]
விழாக்கள்
வைகாசி விசாகம், கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாசி மகம், தை அமாவாசை, உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. [1]