பத்மநாதன் இராமநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. இராமநாதன்
P. Ramanathan
P. Ramanathan.jpg
இலங்கை மீயுயர் நீதிமன்ற நீதிபதி
மேல் மாகாணத்தின் 4வது ஆளுநர்
பதவியில்
21 சனவரி 2000 – 1 பெப்ரவரி 2002
முன்னவர் கே. விக்னராஜா
பின்வந்தவர் அலவி மௌலானா
ஊவா வெல்லச பல்கலைக்கழக வேந்தர்
பதவியில்
27 சூலை 2005 – 7 டிசம்பர் 2006
தனிநபர் தகவல்
பிறப்பு (1932-09-01)1 செப்டம்பர் 1932
இறப்பு 7 திசம்பர் 2006(2006-12-07) (அகவை 74)
கொழும்பு, இலங்கை
வாழ்க்கை துணைவர்(கள்) மனோ சரவணமுத்து
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி,
மொன்ட்ஃபோர்ட் கல்லூரி
புனித தாவீது கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
சமயம் இந்து
இனம் இலங்கைத் தமிழர்

தேசமானிய பத்மநாதன் இராமநாதன் (Pathmanathan Ramanathan, 1 செப்டம்பர் 1932 - 7 டிசம்பர் 2006) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மீயுயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாகவும், மேல் மாகாண ஆளுநராகவும் பதவியில் இருந்தவர்.[1][2]

வாழ்க்கைச் சுருக்கம்

சங்கரப்பிள்ளை பத்மநாதன், மற்றும் சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர்த்தியான சிறீமணி என்பவருக்கும் பிறந்தவர் இராமநாதன்.[1][3] இராமநாதன் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், தென்னிந்தியாவில் மொன்ட்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார்.[1][3][4][5] பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பின்னர் ஐக்கிய இராச்சியம் சென்று வேல்சு பல்கலைக்கழகத்தின் புனித தாவீது கல்லூரியில் உயர்கல்வி கற்றார்.[1][3][4][5]

இராமநாதன் கொழும்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பையா சரவணமுத்து என்பவரின் மகள் மனோ என்பவரை திருமணம் புரிந்தார்.[6]

பணி

இலங்கை திரும்பிய பின்னர் இராமநாதன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சில காலம் பணியாற்றினார்.[3] பின்னர் மீயுயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1][5] 1970களின் இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடிக்குரிய வழக்குரைஞராக இணைந்தார்.[1][3][4][5] 1978 இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாத்தறை, அனுராதபுரம், குருணாகல், கொழும்பு ஆகிய இடங்களில் பணியாற்றினார்.[1][3][4][5] 1985 இல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1][3][5] பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரானார்.[3][5] அதன் பின்னர் மீயுயர் நீதிமன்ற நீதிபதியானார்.[1][3][4][5]

இராமநாதன் டென் ஹாக் நிரந்தர நடுவர் நீதிமன்ற உறுப்பினராகவும், இந்தோ-பசிபிக் சட்ட சபை உறுப்பினராகவும், பிரித்தானிய அறிஞர்கள் சபையின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3][4] இலங்கையின் இரண்டாவது உயர் விருதான தேசமானிய விருதை அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இருந்து பெற்றார்.[3][4]

இறுதிப் பகுதி

மீயுயர் நீதிமன்றத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர், இராமநாதன் 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் 4வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1][3][5] 2002 பெப்ரவரி வரை அவர் அப்பதவியில் இருந்தார். பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2005 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[7] இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும், பொன்னம்பலவாணேசுவரர் கோயில் உட்படப் பல இந்து சமய நிறுவனங்களின் அறங்காவலராகவும் இருந்து சேவையாற்றினார்.[1][3] சுழல் கழக உறுப்பினராகவும், மற்றும் விடுதலைக் கட்டுநராகவும் இருந்து சேவையாற்றினார்.[1]

இராமநாதன் 2006 டிசம்பர் 7 ஆம் நாள் கொழும்பில் காலமானார்.[1][8][9]

மேற்கோள்கள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 Sanmuganathan, Muttusamy (1 செப்டம்பர் 2009). "Remembering Justice Ramanathan: A Man for All Seasons". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060328/http://www.island.lk/2009/09/01/features2.html. 
  2. ஜி. எல். பீரிஸ் (4 டிசம்பர் 2008). "An exceptional, rare person in the cynical times". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2008-12-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207041604/http://www.dailynews.lk/2008/12/04/fea03.asp. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 Maniccavasagar, Kalabhooshanam Chelvatamby (15 சனவரி 2007). "Deshamanya Justice Ramanathan - a colossus, multi-dimensional and multi-faceted personality". டெய்லி நியூஸ் இம் மூலத்தில் இருந்து 2013-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218224301/http://www.dailynews.lk/2007/01/15/fea20.asp. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 Amarasingham, Kumudu (27 நவம்பர் 2005). "Justice Ramanathan: A fairer view of life". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20051127/review.htm. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 Malalasekera, Sarath (13 செப்டம்பர் 2010). "Legal luminaries who lit up the Bar". டெய்லிநியூஸ் இம் மூலத்தில் இருந்து 2013-02-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130219002809/http://www.dailynews.lk/2010/09/13/fea25.asp. 
  6. Goonesekere, R. K. W. (31 ஆகத்து 2011). "1st September Birthday Tribute Justice P. Ramanathan". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303235905/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=5622. 
  7. Edirisinghe, Dasun (30 சூலை 2005). "Sarath Amunugama appointed Vice Chancellor". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000308/http://www.island.lk/2005/07/30/news30.html. 
  8. de Silva, G. P. S. (7 டிசம்பர் 2008). "Justice P. Ramanathan". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304045402/http://www.island.lk/2008/12/07/features5.html. 
  9. "Death of Deshamanya Justice P. Ramanathan". டெய்லிநியூஸ். 8 டிசம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2012-07-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120730164754/http://www.dailynews.lk/2006/12/08/news10.asp. 
"https://tamilar.wiki/index.php?title=பத்மநாதன்_இராமநாதன்&oldid=25223" இருந்து மீள்விக்கப்பட்டது