நிதாஉல் இஸ்லாம் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நிதாஉல் இஸ்லாம் முதலாவது இதழ்

நிதாஉல் இஸ்லாம் என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 1984ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக வெளிவரும் ஓர் இசுலாமியக் காலாண்டு இதழாகும். நிதாஉல் இஸ்லாம் என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் தமிழ்க்கருத்து இசுலாமிய அழைப்பு என்பதாகும்.

முதலாவது இதழ்

1984ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வெளிவருகின்றது.

நிர்வாகம்

இதன் பிரதம ஆசிரியர் மௌலவி எம். க்யூ. புர்ஹானுத்தீன் அஹ்மத். இவர் ஒரு எழுத்தாளரும், மார்க்க அறிஞருமாவார். இச்சஞ்சிகை நாவலப்பிட்டி சொய்சாகலை அல்-இர்பான் வெளியீட்டுப் பணியகத்தால் வெளியிடப்படுகின்றது.

சிறப்பு

இசுலாமியக் கருத்துக்களை ஆதாரபூர்வமாக முன்வைத்தல், எளிய நடையில் பாமர மக்களும் விளங்கத்தக்க வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுதல் ஆகியன இதன் சிறப்புகளாகக் கூறப்படுகின்றது.

உள்ளடக்கம்

இசுலாமியக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், குர்ஆன் விளக்கவுரை, வரலாற்றுச் சான்றுகள், மாணவர் பக்கம், நேயர் நெஞ்சம், ஐயமும் தெளிவும் வினா - விடை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளிவருகிறது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்