நாளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாளை
நாளை
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் ச. பொன்னுத்துரை
குரல்
கொடுத்தவர்
பிரிதா
உண்மையான
தலைப்பு
நாளை
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
நாளை
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
3
பொருண்மை அரசியல்
வெளியிடப்பட்டது May 21, 2021 2
.rd .ed
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 158
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
978-1008939905
முன்னைய
நூல்
அழிவின் அழைப்பிதழ்
அடுத்த
நூல்
பரதேசி


நூல் விபரம்

நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலே உள்ள அரசியல் யதார்த்தங்கள் புகலிடத்தமிழ்க் குடும்பம் ஒன்றின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகளை எவ்வாறு அலைக்கழிக்கின்றன என்று காட்டும் கதை.

ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலையைப் பேசும் இப்புதினம், கடந்த காலத்தில் இத்தமிழர்களின் ஒரு பிரிவினரான வெள்ளாளச் சாதிகள் நடத்திய சாதி வெறியையும் கண்டிக்கத் தவறவில்லை. ஈழப் போராளிக் குழுக்கள் இந்திய அரசின் செல்லப் பிள்ளைகளாகிச் சீரழிந்ததையும் அம்பலப்படுத்துகின்றது. அனைத்துக்கும் மேலாக, ஈழப்போராட்டத்தை ஆதரிக்கும் ஒருவர், அகிம்சையில் நம்பிக்கை கொண்ட காந்தியவாதியாகவும் இருக்கிறார். தேவகுருவின் பாத்திரப்படைப்பால் நேர்ந்து விட்ட முரண்பாடு என்று இதைக் கொள்ளவியலாது. அகிம்சையின் அனைத்து முறையீடுகளும் தீர்ந்து போனபின் ஆயுதம் தரிக்க நேர்ந்த அவலத்தைத் தேவகுரு உணர்ந்திருக்கிறார். எனினும், தாயகத்தில் தோற்றுவிட்ட அகிம்சை, புகலிடத்திலாவது வெல்லும் என்ற நம்பிக்கையில், தனக்கு நேர்ந்த அவமதிப்புகளை எல்லாம் சகித்துக் கொண்டு தமது உறுதியில் நிற்கிறார். அந்த வன்முறை நொஸ்குகள், தேவகுருவின் மனித நியாயத்தை உணர்வார்களா? லேனா என்ற பெண் மனத்தில் விழுந்த நியாயத்தின் சிறுபொறி, இனவெறியில் இருண்ட அந்த நெஞ்சுக் கூட்டுக்குள் ஒளியேற்றுமா? தெரியவில்லை. என்று கவிஞர் இன்குலாப்பினால் பிரஸ்தாபிக்கப்படுகிறது.

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=நாளை&oldid=27751" இருந்து மீள்விக்கப்பட்டது