நாடோடிகள் கோபால்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாடோடிகள் கோபால்
பிறப்புகே. கே. பி. கோபாலகிருஷ்ணன்
இறப்பு5 பெப்ரவரி 2020(2020-02-05) (அகவை 54)
மற்ற பெயர்கள்கோபாலகிருஷ்ணன்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2009 – 2020
பிள்ளைகள்2

நாடோடிகள் கோபால் (Naadodigal Gopal) ஓர் குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் ஈரோட்டில் பணிபுரியும் பள்ளி ஆசிரியரான கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் (இரட்டையர்கள்) உள்ளனர்.

தொழில்

ஒரு விவசாயியான கோபால் நாடோடிகள் (2009) என்ற படத்தில் அனன்யாவின் தந்தையாக அறிமுகமானார்.[1][2] பின்னர் ராஜா மந்திரி (2016) கலையரசன், காளி வெங்கட் ஆகியோரின் தந்தையாக நடித்தார். நம்ம வீட்டு பிள்ளை (2019) படத்தில் சிவகார்த்திகேயனின் சாராய மாமாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.[3] அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 (2020) இவருடைய கடைசி படமாக இருந்தது.[1][2]

இறப்பு

கோபால் 5 பிப்ரவரி 2020 அன்று மாரடைப்பால் தனது 54 வயதில் இறந்தார்.[1][2]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நாடோடிகள்_கோபால்&oldid=21899" இருந்து மீள்விக்கப்பட்டது