நயினார்கோயில் நாகநாதர் கோயில்
அருள்மிகு நாகநாதசுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | இராமநாதபுரம் |
அமைவிடம்: | நயினார்கோயில், பரமக்குடி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | இராமநாதபுரம் |
மக்களவைத் தொகுதி: | இராமநாதபுரம் |
கோயில் தகவல் | |
மூலவர்: | நாகநாதசுவாமி |
தாயார்: | சௌந்தரநாயகி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
நயினார்கோயில் நாகநாதர் கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1][2]
அமைப்பு
இக்கோயிலில் சிவன், பார்வதி, முருகன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் உள்ளனர். முன் கோபுரம் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இங்குள்ள நாகநாதர் துலாக்கோல் போல் உள்ளவர் என்று கூறுகின்றனர். திரிசங்கு சொர்க்கம் செல்ல விரும்பி தன் குரு வசிஷ்டரிடம் கூறினார். அதற்கு ஒரு வருடமாவது யாகம் செய்ய வேண்டும் என்றார். அதனை அவர் ஏற்காததால் திரிசங்குவை புலையனாகும்படி சபித்தார். விசுவாமித்திரரிடம் திரிசங்கு இதிலிருந்து நீங்குவதற்கான வழியைக் கேட்டார். நமச்சிவாய மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாகவும், யாகம் நடத்துவதன் மூலமாகவும் அதன்படி ஒரே நாளில் சொர்க்கம் செல்லலாம் என்று அவர் கூறினார். யாகத்தை நடத்த வரும்படி வசிஷ்டரின் புத்திரர்களை கேட்டுக்கொண்டார். அவர்களோ சாபம் பெற்றவருக்காக யாகம் நடத்தமுடியாது என்று மறுத்தனர். அவர்களை வேடர்களாகும்படி அவர் சபித்தார். சாப விமோசனம் வேண்ட தெற்கேயுள்ள காட்டில் சிவ பூசை செய்து விமோசனம் பெறலாம் என்றார். அவர்களும் அவ்வாறே விமோசனம் பெற்றனர். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] [3]
திருவிழாக்கள்
இறைவிக்கு ஆடியில் 15 நாளும், இறைவனுக்கு வைகாசியில் 10 நாளும் பிரம்மோற்சவம் நடத்தப்பெறுகின்றன. இவை தவிர பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.[2] இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
படத்தொகுப்பு
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
- ↑ 2.0 2.1 2.2 அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.