நன்னாகனார் (இசைவாணர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புலவர் நன்னாகனார் சங்ககாலத்தின் முற்பகுதியில் வாழ்ந்தவர். இசைவாணர் நன்னாகனார் சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவர். கீரந்தையார் என்னும் புலவர் திருமால்மீது பாடிய பரிபாடலுக்கு [1] இசைவாணர் நன்னாகனார் பண்ணமைத்துப் பாடியுள்ளார். இவர் பாடிய பண் பாலைப்பண். இது பாலையாழ் எனவும் வழங்கப்பெறும்.

திருமாலே! சுற்றத்தாரோடு உன்னை வணங்கும்போது எங்கள் அறிவு எங்களது துன்பத்தைப் பற்றி எதையும் நினைக்காமல் இருக்கும் வரம் தந்தருள்க என வேண்டும் உயர்ந்த உள்ள வரிகள் இந்த இசைவாணரை ஈர்த்திருக்க வேண்டும்.[2]

அடிக்குறிப்பு

  1. பரிபாடல் 2
  2. தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;

    கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,

    கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்

    'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!'

    எனவே. (பரிபாடல் 2)
"https://tamilar.wiki/index.php?title=நன்னாகனார்_(இசைவாணர்)&oldid=8558" இருந்து மீள்விக்கப்பட்டது