திருக்குறள் ஆய்வு நூல்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
திருக்குறள் ஆய்வு நூல்கள் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெயரால் அறியப்படுகின்ற திருக்குறள் பற்றி அறிஞர்கள் ஆய்ந்து வெளியிட்டுள்ள நூல்களைக் குறிக்கும்.
உரை நூல்கள்
திருக்குறளை ஆய்கின்ற நூல்களுள் முதலிடம் பெறுபவை உரை நூல்கள். இத்தகைய உரை நூல்களுள் 10ஆம் நூற்றாண்டிலிருந்தே எழுதப்பட்ட பழைய உரை நூல்களும் அதன் பின்னர் எழுந்த புதிய உரை நூல்களும் அடங்கும்.
பல வகை உரைகள்
திருக்குறளுக்கு எழுதப்பட்டுள்ள உரைகளின் வகைகளை முனைவர் கு. மோகன ராசு கீழ்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்:[1]
- பொழிப்புரைகள்
- பதவுரைகள்
- ஒரு வரி உரைகள்
- விளக்க உரைகள்
- கருத்துரைகள்
- குறள் தொடர்ந்த கருத்துரைகள்
- பொழிப்புரை கருத்துரைகளின் தொகுப்புகள்
- உரைகளின் தொகுப்புரைகள்
ஆய்வு நூல்கள்
மேற்கூறிய உரைவகைகள் தவிர திருக்குறளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற எண்ணிறந்த நூல்கள் குறிப்பாக 20-21ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
- மு. சண்முகம் பிள்ளை, திருக்குறள் அமைப்பும் முறையும், சென்னைப் பல்கலைக் கழகம், 1972.
- கருவை பழனிசாமி, திருக்குறளில் மரபும் திறனும், திருமொழிப் பதிப்பகம், சென்னை, 2004.
- எச். இராமசாமி, திருக்குறள் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004.
- கு. ச. ஆனந்தன், வள்ளுவரின் மெய்யியல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு: 1986.
- சா. கிருட்டினமூர்த்தி (பதிப்பாசிரியர்), இக்கால உலகிற்குத் திருக்குறள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, 3 தொகுதிகள்.
- செ. வில்லியம் டெல், குறளும் ஆன்மீகமும், R. கீதா புத்தகாலயம், திருவள்ளூர், 2002.
- ஜி. சுப்பிரமணிய பிள்ளை, வள்ளுவர் விருந்து, மணிவாசகர் பதிப்பகம், 2003.
- கு. மோகனராசு, வீ. ஞானசிகாமணி (தொகுப்பாசிரியர்கள்), கிறித்துவர்களின் திருக்குறள் கொடை, மணிவாசகர் பதிப்பகம், 2004.
- பா. கமலக்கண்ணன், சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு, வானதி பதிப்பகம், சென்னை, 1993, 2005.
- ஆனந்த், திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள், பாரதி நிலையம், சென்னை, 2001.
- பா. நடராஜன், வள்ளுவர் தந்த பொருளியல், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, முதற்பதிப்பு: 1965.
- செ. வை. சண்முகம், குறள் வாசிப்பு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002.
- ப. முருகன் (தொகுப்பு), மனம் கவர்ந்த குறள்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2001.
- இ. சுந்தரமூர்த்தி (தொகுப்பாசிரியர்), குறளமுதம், தமிழ் வளர்ச்சி இயக்ககம், குறளகம், சென்னை, 2000.
- ந. சுப்ரமண்யன், திருக்குறட் கட்டுரைகள், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், உடுமலைப்பேட்டை, 2004.
- அ. சக்கரவர்த்தி நயினார், திருக்குறள் வழங்கும் செய்தி (The Message of Thirukkural), தமிழாக்கம்: ஊ. கொற்றன்காரி (ஜயராமன்), மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.
- சாமி சிதம்பரனார், வள்ளுவர் வாழ்ந்த தமிழகம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2001.
- மு. சதாசிவம், வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும், மணிவாசகர் பதிப்பகம், 2004.
- கு. மோகனராசு, திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தங்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.
- கு. மோகனராசு, கன்பூசியசும் திருவள்ளுவரும், மணிவாசகர் பதிப்பகம், 2003.
- சாமி வேலாயுதம், திருக்குறட் சொல்லடைவு, தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சைவசித்தாந்த கழகம், சென்னை, 2002.
- கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.
- கு. மோகனராசு, திருக்குறளில் திருப்புரைகள், சென்னைப் பல்கலைக்கழகம், 2003.
- மு. சண்முகம் பிள்ளை, அகப்பொருள் மரபும் திருக்குறளும், சென்னைப் பல்கலைக் கழகம், 1980.
- வி. பத்மநாபன், திருவள்ளுவரின் குறள் நெறியும் ஒளவையாரின் அருள் மொழியும் (ஆங்கில விளக்க உரையுடன்), மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2005.
- பொன். சௌரிராசன், திருக்குறளில் பொதுநிலை உத்திகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005.
- க. வச்சிரவேல், திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே, தென்றல் நிலையம், சிதம்பரம், 2002.
- ஜி. கணேசன் (தொகுப்பாசிரியர்), திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள் (ஆங்கில விளக்கங்களுடன்), மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2005.
- ப.சு. மணியம், திருக்குறளில் அறிவு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010.
- கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005.
ஆதாரம்
- ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2005