தான்சேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தான்சேன்
தான்சேன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தான்சேன்
பிறந்தஇடம் குவாலியர்
பணி இந்துஸ்தானி இசை


தான்சேன் (1506 - 1589), இந்துஸ்தானி இசை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல இராகங்களை கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். கருநாடக இசைக் கலைஞர்கள் திருவையாறுக்கு சென்று தியாகராஜரின் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.

தான்சேன் குவாலியர் என்ற இடத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை பெயர் முகுந்த் மிஸ்ரா. ஹரிதாஸ் சுவாமிகளிடம் இசை பயின்ற தான்சேன் மேவாவின் (Mewa) அraண்மனை வாத்தியக்கலைஞராக இருந்தார். பின்னர் அக்பரின் அரசவைக் கலைஞரானார். மியான் என்னும் பட்டத்தையும் அக்பரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். மியான் தான்சேன் பின்னர் இஸ்லாமியத்துக்கு மதம் மாறினார்.

"https://tamilar.wiki/index.php?title=தான்சேன்&oldid=7680" இருந்து மீள்விக்கப்பட்டது