தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°54′16″N 76°55′57″E / 10.904575°N 76.932585°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் மாவட்டம் |
அமைவிடம்: | தர்மலிங்கமலை, மதுக்கரை |
சட்டமன்றத் தொகுதி: | கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 558 m (1,831 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | தர்மலிங்கேசுவரர் |
குளம்: | கிணறு |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி, பங்குனி உத்திரம் |
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மதுக்கரை புறநகர்ப் பகுதியில் தர்மலிங்கமலை மீது அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] தர்மர் சிவபெருமானை வழிபட்ட தலமாக இக்கோயில் கருதப்படுகிறது.[2] கோயம்புத்தூரின் திருவண்ணாமலை என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.[3]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 558 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°54′16″N 76°55′57″E / 10.904575°N 76.932585°Eஆகும்.
இக்கோயிலில் மூலவர் தர்மலிங்கேசுவரர் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தர்மலிங்கேசுவரர், விநாயகர், முருகன், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]
மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5]
மேற்கோள்கள்
- ↑ ValaiTamil. "அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ மாலை மலர் (2022-12-06). "மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ "கோவையின் திருவண்ணாமலை..! மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் சிறப்புகள்." News18 Tamil. 2022-12-16. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ "Darma Lingeswarar Temple : Darma Lingeswarar Darma Lingeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
- ↑ "Arulmigu Dharmalingheswarar Temple, Madukkarai, Madukarai - 641105, Coimbatore District [TM010578].,dharmalingeswar,dharmalingeswar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.