தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பரிசுகள் மற்றும் விருதுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் மற்றும் குறுந்தகடுகள் போன்றவற்றிற்கு பரிசுகள் மற்றும் விருதுகள் ஆண்டு தோறும் அளிக்கப்படுகின்றன.
பரிசுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட பெயர்களில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் அளிக்கப்படுகின்றன.
- தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவுப் பரிசு - சிறந்த நாவல் - ரூ.10000/-
- புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு - சிறந்த சிறுகதை நூல் - ரூ. 5000/-
- குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு - தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூல் -ரூ. 5000/-
- அமரர் சேதுராமன் -அகிலா நினைவுப் பரிசு - சிறந்த குழந்தை இலக்கிய நூல் - ரூ. 5000/-
- தமிழறிஞர் வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு - சிறந்த மொழிபெயர்ப்பு நூல் - ரூ. 5000/-
- அமரர் செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு - சிறந்த கவிதை நூல் - ரூ. 5000/-
- அமரர் சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய படைப்பு ஒன்றுக்கு(கதை,கவிதை,நாவல்,ஆய்வு,கட்டுரை என ஏதாவது ஒன்று)- ரூ. 10000/-
விருதுகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட பெயர்களில் விருது மற்றும் பரிசுகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பரிசுத்தொகை இந்திய ரூபாயில் அளிக்கப்படுகின்றன.
- தோழர் மு.சி.கருப்பையா பாரதி – ஆனந்த சரஸ்வதி சார்பாக ஒரு மூத்த நாட்டுப்புறக்கலைஞருக்கு நாட்டுப்புறக்கலைச்சுடர் பட்டம் மற்றும் ரூ.10000 பரிசு
- தோழர் பா.இராமச்சந்திரன் நினைவு விருது - சிறந்த ஒரு குறும்படம் மற்றும் சிறந்த ஒரு ஆவணப்படம் - தலா ரூ. 5000/-
2016 சிறந்த நூல்கள்
2016-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன.[1]
பரிசு/விருது | நூல் | நூலாசிரியர் | பதிப்பகம் |
---|---|---|---|
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது | முகிலினி | இரா.முருகவேள் | பொன்னுலகம் |
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது | ஆதிமுகத்தின் காலப் பிரதி | இரா.பூபாளன் | பொள்ளாச்சி இலக்கிய வட்டம் |
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது | தாழிடப்பட்ட கதவுகள் | அ.கரீம் | பாரதி புத்தகாலயம் |
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர் | பயங்கரவாதியெனப் புனையப்பட்டேன் | அப்பணசாமி | எதிர் வெளியீடு |
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது | 'தீண்டாமைக்குள் தீண்டாமை' : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் | சி. லஷ்மணன்- கோ.ரகுபதி | புலம் வெளியீடு |
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது | மணிமேகலை பன்நோக்கு வாசிப்பு | முனைவர் கா.அய்யப்பன் | காவ்யா பதிப்பகம் |
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது | சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் | ஆர்.பாலகிருஷ்ணன் | பாரதி புத்தகாலயம் |
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது | மாயக்கண்ணாடி | உதயஷங்கர் | நூல்வனம் |
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது | எழுக, நீ புலவன்! | ஆ. இரா.வேங்கடாசலபதி | காலச்சுவடு |
2017 சிறந்த நூல்கள்
2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன [2]
பரிசு/விருது | நூல் | நூலாசிரியர் | பதிப்பகம் |
---|---|---|---|
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது | பெயல் | சைலபதி | யாவரும் பதிப்பகம் |
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது | மகிழ்ச்சியான பன்றிக்குட்டி | வெய்யில் | கொம்பு பதிப்பகம் |
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது | பூர்ணாஃஹூதி | ராமச்சந்திர வைத்தியநாத் | பாரதி புத்தகாலயம் |
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர் | குஜராத் திரைக்குப் பின்னால் | ச.வீரமணி - தஞ்சை ரமேஷ் | பாரதி புத்தகாலயம் |
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது | பேட்டை | தமிழ்ப்பிரபா | காலச்சுவடு பதிப்பகம் |
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது | தமிழ்ப் புதினங்களில் பெண்கள் ஆண்கள் சாதிகள் | எம்.ஆர்.ரகுநாதன் | அலைகள் வெளியீட்டகம் |
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது | 2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நிலம் | முனைவர் சி.இளங்கோ | அலைகள் வெளியீட்டகம் |
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது | வித்தைக்காரச்சிறுமி | விஷ்ணுபுரம் சரவணன் | வானம் பதிப்பகம் |
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது | சங்கப்பனுவல்கள் ' தொகுப்பு மரபு - திணை மரபு | சுஜா சுயம்பு | சந்தியா பதிப்பகம் |
2018 சிறந்த நூல்கள்
2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன [3]
பரிசு/விருது | நூல் | நூலாசிரியர் | பதிப்பகம் |
---|---|---|---|
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது | அற்றவைகளால் நிரம்பியவள் | பிரியா விஜயராகவன் | கொம்பு பதிப்பகம் |
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது | அம்பட்டன் கலயம் | பச்சோந்தி | வம்சி புக்ஸ் |
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது | கனா திறமுரைத்த காதைகள் | சித்ரன் | யாவரும் பதிப்பகம் |
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர் | முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | கமலாலயன் | என்.சி.பி.ஹெச் |
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது | சுளுந்தீ | முத்துநாகு | ஆதி பதிப்பகம் |
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது | எங்கே இருக்கிறாய் கேத்தரின் | மானசீகன் | தமிழினி |
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது | காலனி ஆட்சியில் நலவாழ்வும் நம்வாழ்வும் | மரு.சு.நரேந்திரன் | என்.சி.பி.ஹெச் |
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது | புலி கிலி | நீதிமணி | புக்ஸ் ஃபார் சில்ட்ரன் |
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது | மரபணு என்னும் மாயக்கண்ணாடி | முனைவர் இரா. சர்மிளா | காவ்யா |
2019 சிறந்த நூல்கள்
2017-ம் ஆண்டில் வெளியான சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகள் பின்வருவன [4]
பரிசு/விருது | நூல் | நூலாசிரியர் | பதிப்பகம் |
---|---|---|---|
சிறந்த நாவலுக்கான தோழர் கே.பி.பாலச்சந்தர் நினைவு விருது | உயிர்வாசம் | தாமரைச்செல்வி | சிந்தன் புக்ஸ் |
சிறந்த கவிதை நூலுக்கான வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்- செல்லம்மாள் ப.ஜெகந்நாதன் நினைவு விருது | இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? | சமயவேல் | தமிழ்வெளி |
சிறந்த சிறுகதை நூலுக்கான அகிலா சேதுராமன் நினைவு விருது | லண்டன் 1995 | ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் | ரிவர் தேம்ஸ் பதிப்பகம் |
சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது, மொழிபெயர்ப்பாளர் | நிழல் இராணுவங்கள் | இ.பா.சிந்தன் | எதிர் வெளியீடு |
சிறந்த விளிம்புநிலை மக்கள் படைப்புக்கான அமரர் சு.சமுத்திரம் நினைவு விருது | 1. சாந்தி என்கிற நஜமுன்னிசா
2. கொண்டல் |
தா.சக்தி பகதூர்
ஷக்தி |
சந்தியா பதிப்பகம்
யாவரும் பதிப்பகம் |
சிறந்த கலை இலக்கிய விமர்சன நூலுக்கான தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவு விருது | சிங்கப்பூர் இலக்கியம் | எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி | ஸ்ரீலக்ஷ்மி வெளியீடு |
சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா நினைவு விருது | பாண்டிய நாட்டு வரலாற்றுத்துறை சமூக நிலவியல் | வெ.வேதாசலம் | தஞ்சாவூர் தனலட்சுமி பதிப்பகம் |
சிறந்த குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது | ஒற்றைச் சிறகு ஓவியா | விஷ்ணுபுரம் சரவணன் | புக்ஸ் ஃபார் சில்ரன் |
சிறந்த மொழிவளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான விருது | முத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு (1905-2018) | அ. செல்வராசு | காவ்யா பதிப்பகம் |
மேற்கோள்கள்
- ↑ "'த.மு.எ.க.ச இலக்கிய விருதுகள் அறிவிப்பு..!' செப்டம்பர் 16-ல் விருது வழங்கும் விழா". விகடன். http://www.vikatan.com/news/tamilnadu/100526-literary-award-ceremony-will-be-held-on-september-16-at-nagercoil.html.
- ↑ "த.மு.எ.க.ச வழங்கும் 2017-18-ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகள் அறிவிப்பு". விகடன். https://www.vikatan.com/arts/literature/143173-he-list-of-books-receiving-201718-artsliterature-awards-from-thamuesa.
- ↑ "தமுஎகச இலக்கிய விருதுகள் அறிவிப்பு". தீக்கதிர். https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/ta-mu-ye-ka-sa-literary-awards-announcement.
- ↑ "தமுஎகச வழங்கும் விருதுகள்!". tamil.asiaville. https://tamil.asiaville.in/article/literary-award-ceremony-67151.