தமிழ்ச்செல்வம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்ச்செல்வம்
தமிழ்ச்செல்வம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தமிழ்ச்செல்வம்
பிறந்ததிகதி சூலை 24 1939
பிறந்தஇடம் கடைய நல்லூர்
தமிழ்நாடு
அறியப்படுவது எழுத்தாளர்

தமிழ்ச்செல்வம் (பிறப்பு: சூலை 24 1939), தமிழ்நாடு கடைய நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கு தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பிறகு சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்து குயின்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளியில் உயர்கல்வியைப் பெற்றார்.

தொழில்

தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் புலமைப்பெற்றிருந்த இவர் ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகையில் தனது பணியினை ஆரம்பித்தார். பின்னர் சிங்கப்பூர் வளர்ச்சி வங்கி (டி.பி.எஸ்) இல் சுமார் பதினைந்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினார்.

பதவிகள்

இவர் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் சங்க உறுப்பினராகவும், விஸ்டா சமூக மன்ற இந்தியர் நற்பணிக் குழுவின் துணைத் தலைவராகவும், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் ஆட்சிக் குழுவின் உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயவை உறுப்பினராகவும் பதவிவகித்துள்ளார்.

இலக்கியப் பணி

சிங்கைத் தமிழ்ச்செல்வம் எனும் புனைப்பெயரில் 1960ல் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது முதல் கட்டுரை ‘சமயமும் விழாக்களும்' எனும் தலைப்பில் மலேசியாவிலிருந்து வெளிவரும் ‘தமிழ் ஓசை' இதழில் பிரசுரமானது. அத்துடன் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், புதுக்கவிதைகளையும், 15 மரபுக் கவிதைகளையும். 200க்கும் அதிகமான கட்டுரைகளையும், ஒரு நாவலையும் இவர் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

  • கீழை நாட்டுக் கவிதை மஞ்சரி
  • கவரிமான்
  • குறள் விளக்கக் கதைகள்
  • வாழப் பிறந்தவள்

பெற்ற விருதுகளும், கௌரவங்களும்

  • தமிழ் முரசு நாளிதழ் 1994ல் நடத்திய கவிதைப் போட்டியிலும், சென்னை வி.ஜி.பி. சந்தோசம் தலைமையி;ல் இயங்கும் உலகம் தமிழ்ச்சங்கம் 1996ல் நடத்திய கட்டுரைப் போட்டியிலும், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியிலும் இவரது படைப்புகள் பரிசு பெற்றுள்ளன.
  • இவரது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்த கவிஞர் செவ்வியன் தொகுத்த ‘சிங்கப்பூரும் தமிழர்களும்' எனும் நூலிலும் திருநெல்வேலி சாரா டக்கர்ஸ் கல்லூரிப் பேராசிரியை முனைவர் மங்கையர்க்கரசி எழுதிய ‘இலக்கிய வீதியிலே' எனும் நூலிலும் இடம்பெற்றுள்ளன.

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=தமிழ்ச்செல்வம்&oldid=6015" இருந்து மீள்விக்கப்பட்டது