ஜேம்ஸ் ஸ்பிரிங் பிரான்சன்
ஜேம்ஸ் ஹென்றி ஸ்பிரிங் பிரான்சன் | |
---|---|
சென்னை மாகாண அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1887–1897 | |
பின்னவர் | வி. பாஷ்யம் ஐய்யங்கார் (செயல்) |
மதராஸ் சட்ட மேலவை | |
பதவியில் 1886–1897 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 சூன் 1842 |
இறப்பு | ஏப்ரல் 8, 1897 சென்னை மாகாணம், இந்தியா | (அகவை 54)
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | அரசு தலைமை வழக்கறிஞர், சட்ட மன்ற உறுப்பினர் |
ஜேம்ஸ் ஹென்றி ஸ்பிரிங் பிரான்சன் (James Spring Branson) (11 சூன் 1842 – 8 ஏப்ரல் 1897) இந்திய தன்னார்வப் படையின் அதிகாரியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் மதராஸ் மாகாண அரசின் செயல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.
தொழில்
ஸ்பிரிங் பிரான்சன் இந்திய தன்னார்வப் படையில் நியமிக்கப்பட்டு மெட்ராஸ் பீரங்கி தன்னார்வ படையினருடன் பணியாற்றினார். படைத்தலைவர் என்ற முறையில், 'பூர்வீக மக்களையும்' படைப்பிரிவில் பணியாற்ற அனுமதிக்க அவர் எடுத்த முடிவு கிட்டத்தட்ட வெள்ளை வீரர்களிடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. [1] இதனால் மதராஸ் அரசாங்கம் ஸ்பிரிங் பிரான்சனின் உத்தரவை அவசரமாக ரத்து செய்து, 'பூர்வீக' தொண்டர்கள் மீதான தடையை தொடர்ந்தது. இவர் வழக்கறிஞராக பணியாற்றும் பொருட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு இராணுவத்திலிருந்து தன் லெப்டினன்ட்-கர்னல் பதவியை விட்டு விலகினார்.
இவர் முதலில் வழக்கறிஞராக பதிவுசெய்யப்பட்டார். பின்னர், 1887 சூலையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1887 மார்ச்சில், இவர் மதராஸ் மாகாணத்தின் செயல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஸ்பிரிங் பிரான்சன் மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் மதராஸ் பார் அசோசியேஷனின் தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் 1897 இல் இறந்தார். இவரது உடலானது சென்னை ஆங்கிலிகன் புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள பிரான்சன் கார்டனுக்கு இவரது பெயர் இடப்பட்டது.
குறிப்புகள்
- India List and the India Office List. London: Harrison and Co.. 1893. பக். 384.
- ↑ Mrinalini Sinha, Colonial Masculinity: The 'manly Englishman' and The' Effeminate Bengali' in the Late Nineteenth Century (Manchester University Press, 1995), 83.