சு. சண்முகசுந்தரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சு. சண்முகசுந்தரம்
சு. சண்முகசுந்தரம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
காவ்யா சண்முகசுந்தரம்
பிறப்புபெயர் சு. சண்முகசுந்தரம்
பிறந்ததிகதி டிசம்பர் 30, 1949
பிறந்தஇடம் கால்கரை,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
தேசியம் இந்தியர்
கல்வி தமிழில் முனைவர் பட்டம்
அறியப்படுவது எழுத்தாளர்,
பதிப்பாளர்
பெற்றோர் வெ.சுடலைமுத்துத் தேவர்,
இசக்கியம்மாள்
துணைவர் முத்துலெட்சுமி
பிள்ளைகள் முத்துக்குமார் (மகன்)
காவ்யா (மகள்)
இணையதளம் www.kaavyaa.com

காவ்யா சண்முகசுந்தரம் (பிறப்பு: டிசம்பர் 30, 1949) என்பவர் தமிழ்ப் பேராசிரியர், நூல் வெளியீட்டாளர் மற்றும் தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கால்கரை எனும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.விருது: தமிழ்காவலர் விருது, தமிழ்ச்சுடர் விருது,கவிஞானி விருது, பாரதிதாசன் விருது,கவிமாமணி விருது,சங்ககவிமணி விருது ஆகும்.

கல்வி

இவர் கால்கரை ஆரம்பப் பள்ளியிலும், வடக்கன்குளம் கன்கார்டியா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1977-ல் “திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புற பாடல்களில் சமுதாய அமைப்பு” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தமிழ்ப் பணி

  • பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசியராகப் பணியில் சேர்ந்து 2006 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
  • செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் 2006 முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதுநிலை ஆய்வாளராக “நாட்டுப்புற அரங்கியல்” பற்றியும், 2008 முதல் 2009 ஆம் ஆண்டு வரை “காலந்தோறும் கண்ணகி கதைகள்” என்ற தலைப்பில் சிற்றாய்வும், 2008 - 2011 ஆம் ஆண்டு வரை 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' என்ற தலைப்பில் பேராய்வும் செய்தார்.

எழுத்துப் பணி

பதிப்பு பணி

இவர் காவ்யா பதிப்பகம் எனும் பெயரில் நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

"https://tamilar.wiki/index.php?title=சு._சண்முகசுந்தரம்&oldid=4170" இருந்து மீள்விக்கப்பட்டது