சுப்புலட்சுமி ஜெகதீசன்
சுப்புலட்சுமி ஜெகதீசன் | |
---|---|
சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்திய நாடாளுமன்றத்தின் முன் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சராக | |
ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் | |
பதவியில் 2004–2009 | |
சமூக நலத்துறை அமைச்சர் (தமிழ்நாடு அரசு) | |
பதவியில் 1989–1991 | |
துணி, காதி, கைத்தறி, சிறுதொழில் துறை அமைச்சர் (தமிழ்நாடு அரசு) | |
பதவியில் 1977–1980 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 2004–2009 | |
முன்னவர் | மு. கண்ணப்பன் |
தொகுதி | திருச்செங்கோடு |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1996–2001 | |
முன்னவர் | கவிநிலவு தர்மராஜ் |
பின்வந்தவர் | பி. சி. இராமசாமி |
தொகுதி | மொடக்குறிச்சி |
பதவியில் 1989–1991 | |
முன்னவர் | சு. முத்துசாமி |
பின்வந்தவர் | சு. முத்துசாமி |
தொகுதி | ஈரோடு |
பதவியில் 1977–1980 | |
முன்னவர் | மு. சின்னசாமி |
பின்வந்தவர் | எஸ். பாலகிருஷ்ணன் |
தொகுதி | மொடக்குறிச்சி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 24 சூன் 1947 கொடுமுடி, ஈரோடு மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | திமுக |
பிற அரசியல் சார்புகள் |
அதிமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஏ. பி. ஜெகதீசன் |
பிள்ளைகள் | 1 மகன், மருத்துவர் ஜெயபிரகாஷ் ஜெகதீசன் |
இருப்பிடம் | ஈரோடு |
கல்வி | பிஎஸ்சி., பி.டி., சிறீ சங்கர வித்யா சாலை, கொடுமுடி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, திருச்சி மற்றும் ஸ்ரீ சாரதா கல்லூரி, சேலம். |
As of 22 செப்டம்பர், 2006 Source: [1] |
சுப்புலட்சுமி ஜெகதீசன் (Subbulakshmi Jagadeesan, பிறப்பு: 24 சூன் 1947) என்வர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சரும், ஒன்றிய சமூக நீதி துறை முன்னாள் அமைச்சரும் ஆவார்.
வாழ்க்கை குறிப்பு
சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் நூழைவதற்கு முன்பு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உதவி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தவர். ஆசிரியர் பதவியில் இருந்து விலகிய இவர் அதிமுகவில் இணைந்து 1977 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதிமுக அமைச்சரவையில் கதர் துறை அமைச்சராக இடம்பெற்றார். 1980 இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.[1]
1989 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று திமுக அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக இவரும், இவரது கணவர் ஜெகதீசனும் 1992 இல் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 300 நாட்கள் சிறையில் இருந்த இவர்கள் 1998 இல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டனர்.
1996 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அத்தொகுதியில் விவசாயிகள் கோரிக்கைகளை முன்னிருத்தி 1,030 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் தேர்தல் தள்ளி வைக்கபட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றிபெற்றார். இவரது அரசியல் வாழ்வில் ஈரோடு, மொடக்குறிச்சி, வெள்ளக்கோயில் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்று மு. கருணாநிதியின் அமைச்சரவையில் இருமுறை இடம்பெற்றுள்ளார்.[2]
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமியை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3] பின்னர் அமைந்த மன்மோகன் சிங்கின் ஒன்றிய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் வலுவூட்டல் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.[3]
அரசியலில் இருந்து விலகல்
திமுகவில் உயர் நிலைப் பதவிகளில் ஒன்றான துணைப் பொதுச் செயலாளராக இருந்த சற்குண பாண்டியனின் மறைவிற்குப் பிறகு சுப்புலட்சுமி ஜெகதீசன் அப்பதவிக்கு நியமிக்கபட்டார். 2016 சடமன்றத் தேர்தலில் போட்டியிடாத இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இந்நிலையில் 2022 ஆகத்து 29 அன்று கட்சி பதவியிலிருந்தும், திமுகவிலிருந்தும் விலவகுவதாக திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளதாக 2021 செப்டம்பரில் அறிவித்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "திமுகவிலிருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன் - 45 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவு; தலைமை மீதான அதிருப்தி காரணமா?" (in ta). https://www.hindutamil.in/news/tamilnadu/871157-45-years-of-political-journey-complete-after-subbulakshmi-jagadeesan-quits-dmk.html.
- ↑ "சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகக் காரணம் என்ன?" (in ta). https://www.dinamani.com/latest-news/sirappu-seithigal/2022/sep/20/reason-for-subbulakshmi-jagatheesan-leave-from-politics-3919306.html.
- ↑ 3.0 3.1 "Jagadeesan,Smt. Subbulakshmi". Lok Sabha இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120617071441/http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=4147. பார்த்த நாள்: 2 May 2011.
- ↑ Selvaraj, Vignesh (2022-09-20). "சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி முடிவை எடுத்தது ஏன்..?- 2021 தேர்தல் முதல் திமுக உட்கட்சி தேர்தல் வரை!" (in ta). https://tamil.oneindia.com/news/chennai/what-made-subbulakshmi-jagatheesan-relieving-from-dmk-476632.html.
- வாழும் நபர்கள்
- 1947 பிறப்புகள்
- தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்
- 14வது மக்களவை உறுப்பினர்கள்
- 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
- திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
- இந்திய அமைச்சர்கள்
- இந்திய அரசியல்வாதிகள்
- ஈரோடு மாவட்ட நபர்கள்
- 11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள்
- தமிழக சட்டமன்ற பெண் உறுப்பினர்கள்