சி. சங்கரன் நாயர்
செத்தூர் சங்கரன் நாயர் KCIE | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஜூலை 11, 1857 மலபார் மாவட்டம், சென்னை மாகாணம் |
இறப்பு | 1934 (அகவை 76–77) கேரளா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தொழில் | வழக்கறிஞர், அரசியல்வாதி |
சமயம் | இந்து |
செத்தூர் சங்கரன் நாயர் என்ற முழுப்பெயர் கொண்ட சி. சங்கரன் நாயர் (ஜூலை 11, 1857 – 1934) ஓர் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
மலபார் கடற்கரையில் பிறந்த சங்கரன் நாயர், சென்னை மாநிலக் கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். தற்காலிகத் தலைமை வழக்கறிஞராகவும் சில காலம் பணியாற்றினார். 1908 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 1897 இல் அம்ரோட்டியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். 1900 முதல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பல்வேறு அரசு குழுக்களில் அங்கம் வகித்த இவரது பணியைப் பாராட்டி 1912 இல் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1928 இல் பிரித்தானிய இந்தியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் செய்ய அரசால் உருவாக்கப்பட்ட இந்திய மத்திய குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
- Autobiography of Sir C. Sankaran Nair. Lady Madhavan Nair. 1966.