சிவகிரி புலிப்பாணிச் சித்தர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புலிப்பாணிச் சித்தர் கோயில் என்பது ஈரோடு மாவட்டம் சிவகிரியில் அமைந்துள்ளது. [1] இக்கோயில் சுனைக்கு மேல் அமைந்துள்ளது.

இவருக்கு புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் குருபூசை கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் புலிப்பாணிச் சித்தருக்கு சிலையுள்ளது. இது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் விநாயகர் சிலையானது வடக்கு நோக்கி புலிப்பாணிச் சித்தருக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்: ஈரோட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளகோவில் செல்லும் சாலையில் சிவகிரி உள்ளது.

சிறப்புத் தகவல்கள்: இங்கு வாராவாரம் செவ்வாய்க்கிழமை மாலை பூஜையும் கூட்டு வழிபாடும் நடைபெறுகின்றன. பெளர்ணமி தோறும் சிறப்புப் பூஜைகளும் சிவாகம முறைப்படி நடத்தப்படுகின்றன. இத்தலம் தனியாருக்குச் சொந்தமானது. இக்கோவில் பராமரிப்பு தனிநபரால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதாரங்கள்