சாத்தன் கணபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சாத்தன் கணபதி என்றழைக்கப்பட்ட கணபதி கரவந்த புரத்தில் வாழ்ந்த மருத்துவனாவான். சாத்தன் என்பவனின் மகனான காரணத்தினால் சாத்தன் கணபதி என்ற பெயரைப் பெற்றவன்.பராந்தகன் ஆட்சிக் காலத்தில் படைக்குத் தலைமைத் தளபதியாக இருந்தவன் இவன் பராந்தகனால் அமிர்தலிங்க வரையன் என்ற பட்டத்தினை பெற்றான். திருப்பரங்குன்றத்துக் கோயிலுக்கு அறப்பணி செய்து[1] அங்குள்ள திருக்குளத்தையும் அமைக்கக்காரணமானவனும் ஆவான். இப்பணியினைப் பற்றி பராந்தகனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மனைவியான நக்கன் கொற்றியாரும் கோயில் திருப்பணிகளைச் செய்தவளாவாள்[2]. துர்க்கையம்மனுக்கும், சேட்டைக்கும் தனித்தனியே கோயில் அமைத்தவள் என அக்கோயில் கல்வெட்டு கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

  1. "4.2 முற்காலப் பாண்டியர் (கி.பி. 550 - 1000)". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
  2. குடந்தை என். சேதுராமன். "மூன்றாம் திருமுறை - நால்வர் காலம்". பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
"https://tamilar.wiki/index.php?title=சாத்தன்_கணபதி&oldid=42326" இருந்து மீள்விக்கப்பட்டது