சவுகார்பேட்டை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சௌகார்பேட்டை
சௌகார்பேட்டை சுவரொட்டி
இயக்கம்வி. சி. வடிவுடையான்
தயாரிப்புசான் மாக்சு
சொன்சு
கதைஎசு. ஞானகிரி (வசனங்கள்)
இசைஜான் பீட்டர்
நடிப்புசிறீகாந்த்
லட்சுமி ராய்
ஒளிப்பதிவுஎசு. சிறீனிவாச ரெட்டி
படத்தொகுப்புஎலிசா
கலையகம்சலோம் சுடியோசு
விநியோகம்சிறீ தேனாண்டாள் பிலிம்சு
பிரேம்சு இன்னெவிட்டபில்
வெளியீடுமார்ச்சு 4, 2016 (2016-03-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சவுகார்பேட்டை (Sowkarpettai) சிறீகாந்த் மற்றும் லட்சுமி ராய் முன்னனி நடிகர்களாக நடித்து வி. சி. வடிவுடையான் இயக்கிய தமிழ்த் திகில் படமாகும். இப்படம் மார்ச்சு 4, 2016 அன்று வெளியானது.[1]

நடிகர்கள்

ஸ்ரீகாந்த், லட்சுமி ராய், சுமன், சரவணன், பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், சிங்கம்புலி, மனோபாலா, மீனாக்ஷி, தலைவாசல் விஜய், ரேகா, கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, ஆர்த்தி, கஜேந்திரன், சுப்பாராஜ், வேன்கள் ராவ், மதன், லிங்கேஷ், ராகுல், ப்ரியங்கா

கதைச்சுருக்கம்

வெற்றியும் மாயாவும் ஒருவரை ஒருவர் காதல் செய்தனர். வெற்றியும் சக்தியும் இரட்டை சகோதரர்கள். சக்தி மாயாவை விரும்பினான். அது தெரிய வந்த அவனின் பெற்றோர், சக்தியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சில ஆண்டுகள் கழித்து, வெற்றியும், மாயாவும் அவனது பெற்றோரும் கொல்லப்படுகிறார்கள். இறந்த அவர்கள் ஆவியாக வந்து, குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குகிறார்கள். அந்நிலையில், சக்தி ஒரு மாத்திரவாதியாக மாறி தன் எதிரிகளை கொல்கிறான். மேலும் அவனது சக்தியை பயன்படுத்தி வெற்றியை கொன்று, மாயாவை அடைய முயற்சி செய்கிறான் சக்தி. இறுதியில், யாருக்கு வெற்றி கிடைத்தது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

இப்படத்தின் இசை அமைப்பாளர் ஜான் பீட்டர் ஆவார். விவேகா, நா. முத்துக்குமார் மற்றும் சொற்கோ ஆகியோர் இப்படத்தின் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.[2]

தயாரிப்பு

2015 மார்ச் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படம் ஹிந்தி மொழியில் தந்த்ர ஷக்தி என்றும், தெலுங்கு மொழியில் சிவ கங்கா என்றும் பெயரிடப்பட்டன.[3][4]

வரவேற்பு

இந்த பேய்படத்தில் அவ்வளவாக பயம் ஏற்படவில்லை என்றும், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டது போன்றும், ஒப்பனையும் இசையும் சரிவர அமையவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.[5][6]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "http://www.newindianexpress.com/". {{cite web}}: External link in |title= (help)
  2. "https://www.youtube.com". {{cite web}}: External link in |title= (help)
  3. "http://www.behindwoods.com/". {{cite web}}: External link in |title= (help)
  4. "http://www.indiaglitz.com". {{cite web}}: External link in |title= (help)
  5. "http://www.thehindu.com/". {{cite web}}: External link in |title= (help)
  6. "http://timesofindia.indiatimes.com/". {{cite web}}: External link in |title= (help)