சரிபோதா சனிவாரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சரிபோதா சனிவாரம்
இயக்கம்விவேக் ஆத்ரேயா
தயாரிப்புடி.வி.வி. தனய்யா
கதைவிவேக் ஆத்ரேயா
இசைஜேக்ஸ் பிஜாய்
நடிப்பு
ஒளிப்பதிவுமுரளி ஜி.
படத்தொகுப்புகார்த்திகா ஸ்ரீனிவாஸ்
கலையகம்DVV என்டர்டைமன்ட்
விநியோகம்ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
வெளியீடு29 ஆகத்து 2024 (2024-08-29)
ஓட்டம்175 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு₹90 கோடி[2][3]
மொத்த வருவாய்₹75.26 crore[4]

சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram) என்பது 2024 இந்திய தெலுங்கு மொழி விழிப்புணர்வு அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். விவேக் ஆத்ரேயா எழுதி இயக்கிய இப்படத்தை டி. வி. வி. தனய்யா டி. வி, வி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் நானி, எஸ். ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், அபிராமி, அதிதி பாலன், பி. சாய் குமார், சுபலேகா சுதாகர், முரளி சர்மா, அஜய் கோஷ் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். இது சனிக்கிழமையன்று அநீதிகளுக்கு எதிராக போராடும் சூர்யா என்ற மனிதனைப் பற்றிய கதையைச் சொல்லும் படம், ஒரு ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரியான தயாவுடன் மோதுகிறார்.

90 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் நானியின் இதுவரையிலான திரை வாழ்க்கையில் கூடுதல் செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஆகும். இது அக்டோபர் 2023 இல் தற்காலிக தலைப்பான #Nani31 என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ தலைப்பு சில நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. முதன்மைப் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கியது. இது பெரும்பாலும் ஹைதராபாத்தில் பல கட்டங்களாக படமாக்கப்பட்டது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைக்க, முரளி ஜி. ஒளிப்பதிவு செய்ய, கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத் தொகுப்பை மேற்கொண்டார்.

இப்படம் 29 ஆகத்து 2024 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியானது, பொதுவாக விமர்சகர்களிடமிருந்து கலவையான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சரிபோதா_சனிவாரம்&oldid=38208" இருந்து மீள்விக்கப்பட்டது