சத்தியேந்திரா குமாரசுவாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சத்தியேந்திரா குமாரசுவாமி (Satyendra Coomaraswamy, 1920 – 15 சனவரி 1988) இலங்கையின் முன்னாள் முதல்-தரத் துடுப்பாட்ட வீரரும், இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[1]

சத்தியேந்திரா செல்லப்பா குமாரசுவாமி, மங்கையர்க்கரசி ஆகியோருக்குப் பிறந்தவர். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் கல்லூரித் துடுப்பாட்ட அணியில் ரோயல்-தோமியன் போட்டிகளில் விளையாடினார்.[2] இடை-நிலை துடுப்பாட்ட வீரரான இவர் சுழல் திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார். தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்திற்காக விளையாடினார்.[1] 1948 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக முதற் தடவையாக விளையாடினார்.[1] ஆத்திரேலியா அணிக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் ஆர்வி, ஏமன்சு ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து மொத்தம் நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார்.[1]

1948-49 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் போட்டியில், முதல் ஆட்டத்தில் 6, 35 ஓட்டங்களையும், இரண்டாவது ஆட்டத்தில் 57, 41 ஓட்டங்களையும் பெற்றார்.[1] 1949-50 இல் இலங்கை அணியில் பொதுநலவாய XI அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடினார். 1950 இல் தமிழ் யூனியன் அணித் தலைவராக விளையாடினார்.[1]

சத்தியேந்திரா குமாரசுவாமி இலண்டன் மேரிலிபோன் துடுப்பாட்ட அணியின் கௌரவ உறுப்பினராக இருந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு அறிவியல் துறையில் தெரிவாகும் சிறந்த மாணவருக்கு இவரது நினைவாக விருது வழங்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Obituaries in 1988". ESPNcricinfo. http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/228610.html. பார்த்த நாள்: 4 சூலை 2016. 
  2. "Royal-Thomian". குட்டன்பேர்க் திட்டம். பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2016.
  3. "Special Prizes". கொழும்பு ரோயல் கல்லூரி. Archived from the original on 2016-07-17. பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2016.