கோ. சூ. பிரகாஷ் ராவ்
கோ. சூ. பிரகாஷ் ராவ் | |
---|---|
பிறப்பு | கோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ் 27 ஆகஸ்ட் 1904 கோலவென்னு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (நவீன ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 1996 (அகவை 81–82) |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், ஒளிப்பதிவாளர் |
வாழ்க்கைத் துணை | ஜி. வரலட்சுமி (தி. 1943–1996) |
பிள்ளைகள் | கோவெலமுடி ராகவேந்திர ராவ் உட்பட மூவர் |
உறவினர்கள் | பிரகாஷ் கோவெலமுடி (பேரன்) கோ. பாப்பையா (மருமகன்) |
விருதுகள் | நந்தி விருது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் |
கோவெலமுடி சூர்ய பிரகாஷ் ராவ் ( Kovelamudi Surya Prakash Rao ) (1914-1996) கே. எஸ். பிரகாஷ் ராவ் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரும் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணிபுரிந்தார்.[1][2][3] 1977 இல் கன்னடத்தில் சிறந்த இயக்குனருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை கந்தா ஹெந்தி என்ற படத்துக்காக வென்றார். [4] 1995 ஆம் ஆண்டில், ராவ் தெலுங்குத் திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக ரகுபதி வெங்கையா விருதைப் பெற்றார்.[1] [3] [5] இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கே. ராகவேந்திர ராவின் தந்தையும் மற்றொரு பிரபல இயக்குனர் கோ. பாப்பையாவின் மாமாவும் ஆவார்.
அவன் ஒரு சரித்திரம் (1976), மறுமலர்ச்சி (1956), பெற்ற தாய் (1953) போன்ற சில தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார்.
விருதுகள்
- 1968 ஆம் ஆண்டு பந்திப்போடு தொங்கலு திரைப்படத்திற்காக சிறந்த கதை எழுத்தாளருக்கான நந்தி விருதை வென்றார். [6]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "A trailblazer in his own right". தி இந்து. 5 September 2014. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/a-trailblazer-in-his-own-right/article6380677.ece.
- ↑ "BoxOffice India.com". Archived from the original on 8 July 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
- ↑ 3.0 3.1 "Collections". Update Video Publication. 1 January 1991 – via Google Books.
- ↑ "Old Telugu Music: Tahsildar Gari Ammayi (Sobhan Babu & Jamuna)". பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
- ↑ "Tahasildar Gari Ammayi (తహసిల్దారి గారి అమ్మాయి) 1971 tunes". 17 December 2011. பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in தெலுங்கு)