கோவிந்த சுவாமிநாதன்
கோவிந்த சுவாமிநாதன் | |
---|---|
தலைமை வழக்கறிஞா், தமிழ்நாடு | |
பதவியில் 1969–1976 | |
முன்னவர் | மோகன் குமாரமங்கலம் |
பின்வந்தவர் | கே. பராசரன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 9 அக்டோபர் 1909 |
இறப்பு | செப்டம்பா் 30, 2003 (அகவை 93) |
கோவிந்த சுவாமிநாதன் (அக்டோபர் 9, 1909 - செப்டம்பர் 30, 2003) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞர் ஆவார். இவர் 1969 முதல் 1976 வரை தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் பணியாற்றினார்.
இளமை வாழ்க்கையும் கல்வியும்
கோவிந்த் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று வழக்கறிஞா் சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் இணையருக்கு மகனாக பிறந்தார். மூன்று பிள்ளைகளில் இவா் முதலாவா் ஆவார். மற்ற இவரது உடன்பிறப்புகள் இலட்சுமி சாகல் (1914-2012) மற்றும் மிருணாளினி சாராபாய் (1918-2016) ஆகியோா் ஆவா். இவர் சென்னையில் கல்வி படிப்பை படித்தாா். மேலும் உயா் கல்வியான பாாிஸ்டா் படிப்பை 1935 இல் ஆக்ஸ்போர்டியிலும் பயின்றாா்.
தொழில்
கோவிந்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிப்புாிந்தாா். பின்னர் இந்தியாவின் அரசியலுக்கான நிலை கவுன்சிலாகவும் பயிற்சி பெற்றார். அரசு வழக்கறிஞராக பணியாற்றியபோது இவருது முக்கிய வழக்குகளில் ஒன்றாக லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திகழ்ந்தது.
1969 ஆம் ஆண்டு கோவிந்த், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் 1976 வரை பணியாற்றினார். கோவிந்த் 1997 வரையில் அதாவது 87 வயதாகும் வரை வழக்கறிஞராக தீவிரமாகப் பணியாற்றி வந்தாா்.
மேற்கோள்கள்
- "Govind Swaminadhan passes away". The Hindu. 1 October 2003 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040113024015/http://www.thehindu.com/2003/10/01/stories/2003100105741100.htm.