கோபிநாதப்பெருமாள் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நுழைவாயில்
விமானத்துடன் சன்னதி
கோயிலின் பின்புறம் இடிபாடுற்ற கோபுரம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகேயுள்ள பழையாறை நகரின் வடமேற்காக கோபிநாதப்பெருமாள் என்னும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலை கோனப்பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். [2]


பெருமாள்

இங்கு மூலவராக பெருமாள் காட்சியளிக்கிறார்.

விஜயநகரப் பேரரசின் கற்றளி கோயில்

விஜயநகரப் பேரரசின் திருமலை தேவமகாராயரால் கி.பி.15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டுக்களில் இக்கோயில் பற்றிய பல குறிப்புகள் காணப்பெறுகின்றன.[1] கி.பி.1450இல் மல்லிகார்ஜுன தேவராயர் சாசனம் இவ்வூரை திருச்த்திமுற்றமான முடிகொண்ட சோழபுரத்தில் இருந்ததாகச் சொல்கிறது. பழையாறை மாநகரின் வடமேற்கே செம்மாந்து இருந்த இக்கோயிலின் பெரும்பகுதி காலத்தின் கோலத்தால் மறைந்துவிட்டாலும் இன்றும் பண்டைய எச்சங்களைக் காணலாம்.[3]

தற்போதைய நிலை

வாயிற்கோபுரம் இடிபாடுற்ற நிலையிலும், கோயில் வளாகம் புல்பூண்டு முளைத்தும் தற்போது உரிய பராமரிப்பின்றி உள்ளது.சன்னதிக்குள் செல்லமுடியாதபடி எங்கு பார்ததாலும் புற்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் அசுத்தமாகக் காணப்படுகிறது.கோயிலின் திருச்சுற்றில் வெளியே இடிபாடுற்ற நிலையில் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

இரு புத்தர் சிலைகள்

பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள கோபிநாதப் பெருமாள் கோயில் அருகே ஒரு தோப்பில் தலையில்லாத புத்தர் சிலை பிப்ரவரி 2002இல் கண்டுபிடிக்கப்பட்டது.[4] [5] [6] சூன் 2002இல் மற்றொரு புத்தர் சிலை அவ்விடத்தருகே கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்டு 2011இல் அந்த இரு சிலைகளையும் காணவில்லை.

மேற்கோள்

  1. 1.0 1.1 குடவாயில் பாலசுப்பிரமணியன், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  2. குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.414
  3. சுபாஷிணி சாரி, பழையாறைத் திருக்கோயில்கள், மகாமகம் 2004 சிறப்பு மலர்
  4. பட்டீஸ்வரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 2.2.2002
  5. பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 2.2.2002
  6. பட்டீஸ்வரம் அருகே சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 3.2.2002