கொங்கு நாட்டு தங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கொங்கு நாட்டு தங்கம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதைஆரூர்தாஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஆர். ராதா
சி. எல். ஆனந்தன்
புஷ்பலதா
வெளியீடுஏப்ரல் 14, 1961
நீளம்14959 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கொங்கு நாட்டு தங்கம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. எல். ஆனந்தன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, ஆலங்குடி சோமு, புரட்சிதாசன், கோவை குமாரதேவன் ஆகியோர் யாத்தனர். எம். எல். வசந்தகுமாரி, பி.சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 இருந்தும் இல்லாதவரே எம். எல். வசந்தகுமாரி அ. மருதகாசி
2 கண்ணால் இதுவரையில் காணாத பி.சுசீலா
3 கண்டதை கேட்டதை நம்பாதே சீர்காழி கோவிந்தராஜன்
4 நெஞ்சிலே என்ன வீரமிருந்தும் சீர்காழி கோவிந்தராஜன் & பி.சுசீலா
5 கரும்பாக இனிக்கின்ற பருவம் கோவை குமாரதேவன்
6 கந்தா உன் வாசலிலே குழுவினருடன் டி. எம். சௌந்தரராஜன் ஆலங்குடி சோமு
7 உன்னை நெனைச்சி நானிருந்தேன் ஏ. எல். ராகவன் & எல். ஆர். ஈஸ்வரி புரட்சிதாசன்

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-05-07 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170507011844/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961-cinedetails8.asp. பார்த்த நாள்: 2022-05-04. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 22. 
"https://tamilar.wiki/index.php?title=கொங்கு_நாட்டு_தங்கம்&oldid=32575" இருந்து மீள்விக்கப்பட்டது