கேப்பாப்புலவு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கேப்பாப்புலவு என்பது சிறிலங்காவின் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஓர் இடமாகும்.[1]

துல்லியமான அமைவிடம்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்காக அண்ணளவாக ஐந்து கிலோமீற்றர்கள் தொலைவில் கேப்பாப்புலவு அமைந்துள்ளது. புதுக்குடியிருப்பிலிருந்து முள்ளியவளைக்குச் செல்லும் சாலை கேப்பாப்புலவை ஊடறுத்தே செல்கிறது.

தரைத்தோற்றம்

கேப்பாப்புலவானது வயல்வெளிகள், பற்றைக்காடுகள், பெருங்காடுகள் கொண்ட ஓரிடம். கேப்பாப்புலவு வயல்களில் பெரும்போக, சிறுபோக நெற்செய்கை நடைபெறும். தொடக்கத்தில் இப்பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் அதிகம் இருக்கவில்லை. போர் உக்கிரமடைந்த பின்னர், குறிப்பாக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் கணசமான அளவு மக்கள் குடியிருப்புக்கள் பெருகியிருந்தன.

நந்திக்கடல் என அழைக்கப்படும் நீரேரி கேப்பாப்புலவை ஓர் எல்லையாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நந்திக்கடல் நீரேரிக் கரையை அண்டி கால்நடைப் பட்டிகள் பல இருந்தன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கேப்பாப்புலவு&oldid=39585" இருந்து மீள்விக்கப்பட்டது