குமார சரசுவதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குமார சரசுவதி ஒரு பெண்பால் தமிழ்ப்புலவர். கிருட்டிண தேவராயர் காலத்தவர். இவர் பாடியனவாக இரண்டு பாடல்கள் தமிழ் நாவலர் சரிதையில் உள்ளன. [1]

கிருட்டிண பூபாலன்

கிருட்டிண பூபாலன் என்பவனை காதலித்த ஒருத்தி ஏங்கி வருந்துவதாக இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. இரட்டுற மொழிதல் வகை பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. பாடலில் இவன் ஒட்டியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.

பெண் - காதல் நினைவால் ஆடை நழுவுகிறது. உன்னை வணங்குகிறேன். அந்தக் கைகளில் வளையல்களை இழந்துவிட்டேன். தோள் மெலிந்ததால் கடகமும் நழுவுகின்றன. கிருட்டிண பூபாலா! உன்னைப் போரில் கண்டதும் பின்னிட்டு ஓடிய ஒட்டர நாட்டான் போல் ஆடை, வளையல், கடகம் ஆகியவை ஓடுகின்றன.

கிருட்டிண பூபாலன் - இவனிடம் தோற்று ஒட்டியான் கலிங்க நாட்டை இழந்து ஓடினான். தன்னைத் துதிக்கும் சங்கக் கூட்டத்தாரை இழந்தான். கடக நாட்டையும் [2] இழந்தான். மலர் மாலையிம் பொன்னணிகளும் அணிந்தவன். [3]

அபிராமன்

இது அபிராமன்மீது பாடிய வசைப்பாட்டு. இவன் என்ன கூத்தாடினாலும் அஞ்சமாட்டான்; கொடுக்கவும் மாட்டான். ‘பேட்டி சோத்தாட்டவை’ என்னும் தாசிக்குத் தொண்டு செய்பவன். ஆத்தாளின் விழுப்புரம், ஆளும் அம்பிநகர் ஆகியவற்றின் பெயரையும், குலத்தையும் கெடுக்க வந்தவன். [4]

மேற்கோள்

  1. தமிழ் நாவலர் சரிதை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஆய்வுரை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, வெளியீடு, முதல் பதிப்பு 1949 - பக்கம் 195-197
  2. Cuttack
  3. கலிங்கம் இழந்து துதிக்கைச் சங்கம் தோற்று
    மெலிந்து கடகம் நழுவ விட்டாள் - மலிந்த மலர்ப்
    பொன் இட்ட மான கிருட்டிண பூபாலா உன்றனுக்குப்
    பின்னிட்ட ஒட்டியன் போல் பெண்

  4. கூத்தாடில் அஞ்சக் கொடுக்காவரே பேட்டிச்
    சோத்தாட்டவை வேசித் தொண்டனே - ஆத்தாள்
    அந்த விழுப்புரமும் அம்பி நகரும் கெடுக்க
    வந்த குலாமா அபிராமா

"https://tamilar.wiki/index.php?title=குமார_சரசுவதி&oldid=18298" இருந்து மீள்விக்கப்பட்டது