களை (2021 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
களை
இயக்கம்ரோஹித் வி.எஸ்
தயாரிப்புசிஜூ மேத்யூ
நவிஸ் சேவியர்
டோவினோ தாமசு

Akhil George
கதையது புஷ்பகரன்
ரோஹித்
இசைடான் வின்சென்ட்
நடிப்புடோவினோ தாமசு
சுமேஷ் மூர்
லால்
திவ்யா பிள்ளை
பிரமோத் வெல்லியநாத்
ஒளிப்பதிவுஅகில் ஜார்ஜ்
படத்தொகுப்புசாமன் சக்கோ
கலையகம்ஜூவிஸ் புரொடக்ஷன்ஸ்
டோவினோ தாமஷ் புரோடெக்சன்
அட்வென்ச்சர் கம்பெனி
வெளியீடுமார்ச்சு 25, 2021 (2021-03-25) (இந்தியா & GCC)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு₹1.5 crore
மொத்த வருவாய்₹3.10 crore

களை என்பது 2021 ஆம் ஆண்டு இந்திய மலையாள மொழி உளவியல் த்ரில்லர் படமாகும். இதனை ரோஹித் வி.எஸ் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு கதையை யது புஷ்பகரன் மற்றும் ரோஹித் ஆகியோர் எழுதினர். இதில் டோவினோ தாமஸ் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால் பால் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் எடிட்டராக சாமன் சக்கோவும், அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும் பணியிற்றியுள்ளனர். இப்படத்திற்கு டான் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூவிஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் சிஜூ மேத்யூ மற்றும் நவிஸ் சேவியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. அட்வென்ச்சர் கம்பெனி மற்றும் டோவினோ தாமஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் டோவினோ தாமஸ், ரோஹித் வி.எஸ் மற்றும் அகில் ஜார்ஜ் இணைந்து தயாரித்தனர்.[1][2]

சுருக்கம்

ஷாஜி தனது குடும்பத்தினருடன் பண்ணை வீட்டில் வசிக்கிறார். ஷாஜியின் மனைவி கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவராக உள்ளார். ஷாஜி தலைகணம் கொண்ட நபராகவும், பணக்காரராக இருப்பதாலும் நிறைய நண்பர்களுடன் சேர்ந்து வேட்டையாடும் பழக்கமும் கொண்டுள்ளார். சுயமாக தொழில் தொடங்க மனைவியின் உறவினர்களிடம் பணம் பெற்று அந்த தொழில் தோல்வியில் முடிந்ததால் கடன்காரராக உள்ளார்.

ஷாஜியின் தந்தை ரவீந்திரன் ஷாஜியின் மீது வெறுப்பில் உள்ளார். எதற்கும் ஷாஜி சரியான ஆளில்லை என கடிந்து கொள்கிறார். அன்றைய நாளில் ரவீந்திரன் மருத்துவமனை செல்லவேண்டிய நாள். ஆனால் ஷாஜியின் மனைவியும், பையனும் அம்மாச்சி வீட்டிற்கு செல்கிறார்கள். அன்றே மிளகுகளை பறிக்க கூலி ஆட்களும் வருகிறார்கள் என்பதால் ஷாஜி மட்டும் வீட்டில் தங்குகிறார். சேமிப்பகத்தில் உள்ள தந்தை ரவீந்தரனின் மிளகுகளை திருடி தன்னுடைய பணப்பிரட்சனையை தீர்த்து விடலாம் என ஷாஜி நினைக்கிறார். ஆனால் வேலைக்கு வந்த நபர்களில் ஒரு இளைஞன் ஷாஜியை தாக்குகிறான். பிறகு அந்த இளைஞனின் நாயை ஷாஜி கொன்றதும், அதற்காக ஷாஜியை பலிவாங்க அந்த இளைஞன் வந்திருப்பதும் தெரிகிறது.

பன்றியை வேட்டையாடி உண்ணும் இளைஞனுக்கும், பெரும் நிலத்திற்கு சொந்தக்காரரான ஷாஜிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், பழக்கவழக்கங்கள் இப்படத்தில் தெளிவாக காட்டப்படுகின்றன. இறுதி சண்டையில் ஷாஜியை அந்த இளைஞன் பன்றியை கையாளுவதை போல வேட்டையாடூ தனது பக்கமிருக்கும் தர்மத்தை வெளிபடுத்துவதாக படம் நிறைவடைகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

11 ஜூலை 2020 அன்று, டோவினோ தாமஸ் தனது அடுத்த திட்டமான களை என்று அறிவித்தார்.[3] படத்தின் பூசை 5 செப்டம்பர் 2020 அன்று செய்யப்பட்டது [4] மற்றும் முதன்மை புகைப்படம் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது.[5] 7 அக்டோபர் 2020 அன்று டொவினோ சண்டைக்காட்சிகளுக்காக படப்பிடிப்பின் போது அடிபட்டமையால் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .[6][7][8] அவர் காயங்களிலிருந்து மீண்ட பின்னர் 2020 டிசம்பர் 18 அன்று படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.[9][10] படப்பிடிப்பு 30 டிசம்பர் 2020 அன்று நிறைவடைந்தது.[11][12]

இசை

விநாயக் சசிகுமார் எழுதிய வான்யம் பாடல் டான் வின்சென்ட் இசையில் 20 மார்ச் 2021 அன்று ஜூவிஸ் புரொடக்‌ஷனின் யூடியூப் [1] சேனலில் வெளியிடப்பட்டது.

ட்ராக் பாடல் பாடலாசிரியர் இசையமைப்பாளர் பாடகர் (கள்)
1 வான்யம் விநாயக் சசிகுமார் டான் வின்சென்ட் அமிர்தா ஜெயக்குமார், சாத்தன் மூபன், கரியன் மூபன்

வெளியீடு

திரையரங்கம்

களை திரைப்படம் மார்ச் 25 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[13][14]

செயலி

களை அமேசான் பிரைம் வீடியோவில் 24 மே 2021 இல் வெளியானது.

வரவேற்பு

விமர்சன பதில்

இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்தது. தி அப்டேட் 3/5 மதிப்பிடப்பட்ட திரைப்படத்தின் வைசாக் வாமதேவன் மற்றும் "காலா ஒரு புதிய காட்சி அனுபவத்தை வழங்குகிறது, அங்கு தொழில்நுட்ப பக்கங்களும் முதலிடத்தில் இருந்தன" [15]

பிலிம் கம்பானியனின் அனுபமா சோப்ரா எழுதினார், "படம் உங்களை கசக்கிப் போடுகிறது, உங்களுக்குள் இருளைப் பார்க்கிறது, மேலும் சிந்திக்க உங்களை விட்டுச்செல்கிறது" [16]

குறிப்புகள்

  1. Shrijith, Sajin (5 February 2021). "Kala is a tale of fear: Rohith VS". https://www.newindianexpress.com/entertainment/malayalam/2021/feb/05/kala-is-a-tale-of-fear-rohith-v-s-2259633.html. 
  2. K., Janani (11 July 2020). "Kala: Tovino Thomas announces new film with director VS Rohith". https://www.indiatoday.in/movies/regional-cinema/story/kala-tovino-thomas-announces-new-film-with-director-vs-rohith-see-new-poster-1699493-2020-07-11. 
  3. K., Janani (11 July 2020). "Kala: Tovino Thomas announces new film with director VS Rohith". https://www.indiatoday.in/movies/regional-cinema/story/kala-tovino-thomas-announces-new-film-with-director-vs-rohith-see-new-poster-1699493-2020-07-11. K., Janani (11 July 2020). "Kala: Tovino Thomas announces new film with director VS Rohith". இந்தியா டுடே.
  4. Pandey, Nikhil (7 September 2020). "Tovino Thomas Begins Shooting For Rohith VS' 'Kala'; Shares Pictures From Puja Ceremony". https://www.republicworld.com/entertainment-news/regional-indian-cinema/tovino-thomas-begin-shooting-for-kala.html. 
  5. "Tovino’s look from Kala out". 1 October 2020. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2020/oct/01/tovinos-look-from-kala-out-2204087.html. 
  6. G., Krishna Kumar (7 October 2020). "Malayalam actor Tovino Thomas hospitalised". https://www.thehindu.com/entertainment/movies/malayalam-actor-tovino-thomas-hospitalised/article32792233.ece. 
  7. "Actor Tovino Thomas hospitalised after accident on Kala set". 7 October 2020. https://indianexpress.com/article/entertainment/malayalam/tovino-thomas-hospitalised-after-accident-on-kala-set-6706588/. 
  8. Rajan, Silpa (7 October 2020). "Tovino Thomas hospitalized after getting injured on the set of ‘Kala’". https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/exclusive-tovino-thomas-hospitalized-after-getting-injured-on-the-set-of-kala/articleshow/78531485.cms. 
  9. "Tovino Thomas resumes shoot of Kala". 18 December 2020. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/tovino-thomas-resumes-shoot-of-kala/articleshow/79792945.cms. 
  10. "Tovino Thomas back on ‘Kala’ sets after recovering from injuries". 19 December 2021. https://www.thenewsminute.com/article/tovino-thomas-back-kala-sets-after-recovering-injuries-139915. 
  11. "Tovino Thomas completes 'Kala'". 30 December 2020. https://www.newindianexpress.com/entertainment/malayalam/2020/dec/30/tovino-thomas-completes-kala-2242822.html. 
  12. "Tovino Thomas’s ‘Kala’ shooting wrapped up". 30 December 2020. https://www.thenewsminute.com/article/tovino-thomas-s-kala-shooting-wrapped-140541. 
  13. "Tovino Thomas upbeat about ‘A’ certificate for Kala, announces release date". 18 March 2021. https://indianexpress.com/article/entertainment/malayalam/tovino-thomas-upbeat-about-a-certificate-for-kala-announces-release-date-7234379/. 
  14. "Tovino’s ‘Kala’ to hit theatres in March". 17 March 2021 இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210319161101/https://english.mathrubhumi.com/movies-music/movie-news/tovino-s-kala-to-hit-theatres-in-march-movie-1.5522988. 
  15. Vaisakh, Vamadevan. "കള റിവ്യൂ; ഒരു പുതിയ ദൃശ്യാനുഭവം ഒരുക്കി ടോവിനോ ചിത്രം" இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210328064724/https://theupdate.in/kala-malayalam-movie-review/. 
  16. Chopra, Anupama. "Kala, On Amazon Prime Video, Will Batter And Dazzle You" May 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.filmcompanion.in/reviews/malayalam-review/kala-malayalam-movie-review-amazon-prime-tovino-thomas-will-batter-and-dazzle-you-sumesh-moor-lal-anupama-chopra/?utm_source=Wikipedia&utm_medium=May25&utm_campaign=KalaReview. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=களை_(2021_திரைப்படம்)&oldid=29620" இருந்து மீள்விக்கப்பட்டது